செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

விஜய்யை அவமானப்படுத்துகிறாரா சஞ்சய்.? எதிர்க்கட்சிகளுக்கு ரூட் போட்டு கொடுத்த வாரிசு

Vijay: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இப்போது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை அவர் இயக்கும் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த மோஷன் போஸ்டர் வித்தியாசமாக இருந்த நிலையில் சஞ்சய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே போல் அடுத்த கட்ட அப்டேட் எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் மற்றொரு சர்ச்சையும் அவரை சுற்றி வருகிறது. அதாவது சஞ்சய் இயக்குனர் ஆகிறார் என்று சொன்னதுமே விஜயின் ரியாக்ஷன் என்ன என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அப்பாவை கண்டுக்காத சஞ்சய்

சஞ்சய் தான் லைக்கா சுபாஷ்கரனிடம் ஸ்கிரிப்ட்டை கொடுப்பது போன்ற போட்டோ வெளியானது. அந்த சமயத்தில் ஏன் விஜய் உடன் இல்லை என்று கூட சிலர் மறைமுகமாக கேள்வி எழுப்பினர். அரசியல் வட்டாரத்தில் கூட இது வெளிப்படையான பேச்சாக மாறியது.

ஏற்கனவே விஜய் த்ரிஷாவை இணைத்து வந்த கிசுகிசு அவர் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணியதாக தகவல்கள் வெளிவந்தது. இதனால் மனைவி பிள்ளைகள் யாரும் அவருடன் பேசுவதில்லை என்று கூட சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.

தற்போது சஞ்சய்யின் புது பயணத்தில் விஜய் இல்லாதது நெருடலாக இருக்கிறது. அதே போல் ஜேசன் சஞ்சய் தன் அப்பாவின் சோஷியல் மீடியா பக்கத்தை ஃபாலோ செய்யாததும் மற்றவர்களுக்கு கிடைத்த தீனியாக மாறிவிட்டது.

என்னதான் மனஸ்தாபம் கருத்து வேறுபாடு இருந்தாலும் விஜய் ஒரு பெரும் அந்தஸ்தில் இருக்கிறார். தற்போது அரசியலில் கூட அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை அவரின் வாரிசு உணரவில்லையா? எதிர்க்கட்சிகளுக்கு அவரே ரூட் போட்டு கொடுத்து விட்டாரே என தளபதி ரசிகர்கள் தற்போது புலம்பி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News