செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024

தனுஷ் கிட்ட இருந்து தான் அத கத்துக்கணும்.. ex மாமனாருக்கே tough கொடுக்குறாரே

தனுஷை சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டிருக்கிறார். கோலிவுட்டை பொறுத்த அளவில், பிசி ஆக்டர் ஆக வளம் வருகிறார் தனுஷ். ஒரு பக்கம் இயக்கம், மறுபுறம் தயாரிப்பு, இதற்க்கு நடுவில் நடிப்பு என்று அவரை கையிலே பிடிக்க முடியவில்லை. அவரது அப்பா கஸ்தூரி ராஜா சொன்ன மாதிரி வதந்திகளுக்கு பதிலளிக்க அவரிடம் சுத்தமாக நேரமில்லை என்பது தான் உண்மை.

தற்போது குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் தனுஷ். அந்த படத்தில் இன்னும் 2 பாடல்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு பாக்கியுள்ளது. இதற்க்கு நடுவில் இட்லி கடை படத்தை இயக்கி, நடித்து வருகிறார் தனுஷ். மேலும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகளும் நடந்து வருகிறது. இதற்க்கு நடுவில் தான் டெல்லியில் வைத்து தனுஷ் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

ex- மாமனாருக்கே tough கொடுக்குறாரே..

நடிகர் தனுஷ், அடுத்ததாக ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷக் மெய்ன் படத்தின் நடிக்கவிருக்கிறார். அதற்கான பேச்சு வார்த்தை தான் சமீபத்தில் நடந்துள்ளது. அந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே, டெல்லி விமான நிலையத்தில் வைத்து தனுஷை ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள்.

இதை தொடர்ந்து ரசிகர்கள், “உண்மையில் இந்த மனிதரை பார்த்தால் ப்ரம்மிப்பாக உள்ளது. ஒரே நேரத்தில், எப்படி அனைத்தையும் சரியாக பிளான் செய்து முடிக்கிறார். நடிப்பு, அடுத்த படத்தின் கமிட்மெண்ட்ஸ், இயக்கம், தயாரிப்பு, இதற்க்கு நடுவில், தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து.. எப்படி எல்லாவற்றையும் சிங்கிள் ஆளாக handle செய்கிறார்..”

“இவர் போற போக்கை பார்த்தால், இவரது ex-மாமனார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கே tough கொடுப்பார் போலையே..” என்று ரசிகர்கள் பெருமிதத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இவர் planning மதிக்கத்தக்கது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -spot_img

Trending News