மூணு நாளைக்கு படத்தை பத்தி மூச்சி விட கூடாதாம்.. கோர்ட்க்கு போன பண முதலைகள்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை போட்டுள்ளது. அதாவது படம் ரிலீசான மூன்று நாட்களுக்கு விமர்சனம் சொல்ல கூடாது.

எந்த ஒருவரும் facebook, youtube, x, instagram போன்ற சோசியல் மீடியாக்களில் திரைப்பட விமர்சனங்களை வெளியிடக்கூடாது என தமிழக அரசு சட்டம் போட வேண்டுமாம்.

கங்குவா படம் இப்படி வெளிவந்த விமர்சனங்களால் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதனாலதான் இந்த கோர்ட் படி ஏறி இருகாங்க.

படத்தை ஒழுங்கா எடுக்க துப்பில்லை, காசு குடுத்து டிக்கெட் வாங்குறவனுக்குத்தான் அதோட அருமை தெரியும் என இதற்கு பல பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Leave a Comment