சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

டபுள் எவிக்ஷனில் தொக்காக சிக்கிய போட்டியாளர்கள்.. பாரபட்சம் பார்க்காமல் பிக் பாஸ் எடுக்கப் போகும் முடிவு

Bigg Boss 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 8 கிட்டத்தட்ட 50 நாட்களையும் தாண்டி ஒன்பதாவது வாரத்தை அடி எடுத்து வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த வார கேப்டன் ஆக ஜெப்ரி பொறுப்பேற்று இருக்கிறார். அதே மாதிரி இந்த வாரம் நாமினேஷனுக்கு 12 போட்டியாளர்கள் சிக்கிருக்கிறார்கள்.

அதில் முத்துக்குமார், சௌந்தர்யா, ஜாக்குலின், ராணவ், சத்தியா, ரயான், பவித்ரா, மஞ்சரி, ரஞ்சித், தர்ஷிகா, சாச்சனா மற்றும் ஆனந்தி. இவர்களில் வழக்கம்போல் முத்துக்குமார் அதிக ஓட்டுக்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் வெற்றியாளராக முத்துக்குமார் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்ததாக இரண்டாவது இடத்தை பெறுவதற்கு விஷால், சௌந்தர்யா மற்றும் ஜாக்லீனுக்குள் போட்டி போய்க் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அதிகபட்சமாக ஜாக்குலின் இரண்டாவது இடத்தில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இவர்களுக்கு அடுத்ததாக மற்ற போட்டியாளர்களில் யாரை ஒவ்வொன்றாக வெளியே அனுப்ப வேண்டும் என்று மக்கள், ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் வாரத்திற்கு ஒருவரே ஒருவர்தான் அனுப்ப வேண்டும் என்ற சூழ்நிலையில் இருப்பதால் மற்ற போட்டியாளர்கள் எப்படியாவது தப்பித்து விடுகிறார்கள். ஆனாலும் இந்த முறை தப்பிக்க விடக்கூடாது என்று சொல்வதற்கு ஏற்ப மக்களிடம் கம்மி ஓட்டுகளை பெற்று இரண்டு பேர் இருக்கிறார்கள்.

அதில் ஆனந்தி மற்றும் சாச்சனா. இதில் சாச்சினாவிற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களும், முரண்பாடான கருத்துக்களைக் கொண்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக சாச்சினா தப்பித்துக் கொண்டே வருகிறார்.

அதே மாதிரி விஷ பாட்டிலாக சுற்றி தெரியும் ஆனந்தியையும் வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தொக்காக இரண்டு போட்டியாளர்கள் இந்த முறை சிக்கியிருக்கிறார்கள். அதனால் இந்த வாரம் எப்படியும் சாச்சினாவே வெளியேற்ற வேண்டும் என்ற முடிவு பண்ணிய நிலையில் தற்போது வரை ஆனந்தி தான் கம்மி ஓட்டுக்களை பெற்றிருக்கிறார்.

ஆனால் பிக் பாஸ் பொறுத்த வரை ஆனந்தியா அல்லது சாச்சினாவா என்று பார்க்கும் பொழுது ஆனந்தியை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்து விடலாம் என்று முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்து பலமுறை சாச்சினாவை காப்பாற்றி விட்டதால் இந்த முறை ஆனந்திக்கு பாரபட்சம் பண்ண வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ ஆனந்தி அல்லது சாச்சனா இந்த வாரம் வெளியேற போவது உறுதியாகிவிட்டது.

Trending News