வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

வெற்றிக்காக போராடும் நடிகர்.. குழம்பிய குட்டையில் மீன் பிடித்த ஆசாமி

Gossip: பிரபல நடிகருக்கு கடந்த சில வருடங்களாக நேரம் சரியில்லை. படம் தாமதமானதில் தொடங்கி ரிலீசுக்கு பிறகு தோல்வியை சந்தித்தது வரை எல்லாமே நடிகரை உச்சகட்ட டென்ஷனில் ஆழ்த்திவிட்டதாம்.

இருப்பினும் நடிகர் அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். படம் நன்றாக ஓட வேண்டும் என ஜோசியரை பார்த்து பலன் கூட கேட்டாராம். ஆனால் அவரோ மனைவியை விட்டு பிரிந்தால் தான் உங்களுக்கு நல்ல நேரம் என ஒரு குண்டை போட்டு இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியான நடிகர் அதெல்லாம் முடியாது வேறு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் என கேட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து மனைவியை விட்டு சிறிது காலம் பிரிந்திருந்து விரதம் இருக்க வேண்டும் என சொன்னாராம்.

தோல்வியால் அப்செட் ஆன நடிகர்

உடனே நடிகரும் தன்னுடைய வெற்றிக்காக அனைத்து வேலைகளையும் செய்து இருக்கிறார். ஆனால் படம் வெளிவந்து மண்ணை கவ்வியது தான் மிச்சம். இதனால் கடுப்பான நடிகர் ஜோசியரை கூப்பிட்டு வாங்கு வாங்கு என வாங்கி விட்டாராம்.

என் பொண்டாட்டி தான் எனக்கு லக்கி உன் பேச்சைக் கேட்டு இருந்தா என் வாழ்க்கை அவ்வளவுதான் என தாளித்து எடுத்து விட்டாராம். அதை தொடர்ந்து வேறு சிலரிடம் பலன் கேட்டிருக்கிறார்.

அவர்கள் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது சேர்ந்து வாழலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்போது சற்று நிம்மதியான நடிகர் வெற்றிக்கு என்ன வழி என சிந்தித்து வருகிறாராம். அதேபோல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் ஆசாமிகளையும் தன்னை விட்டு ஒதுக்கி வைத்து விட்டாராம்.

- Advertisement -spot_img

Trending News