Bigg Boss 8 Tamil: ஏஞ்சல் மற்றும் டேவில் டாஸ்க் விறுவிறுப்பாக இருந்தாலும் முழுக்க முழுக்க வன்மத்தை தீர்க்கும் ஒரு போட்டியாக தான் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் மஞ்சரி இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களிடம் அனுபவித்த சித்திரவதைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில போட்டியாளர்களை வச்சு செய்து வருகிறார்.
அதில் பவித்ரா மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டு வருகிறார். அத்துடன் தீபக், டீசன்டான ஒரு டாஸ்க்கை கொடுத்து பிசாசுகளை டார்ச்சர் செய்து வருகிறார். ஆனால் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா இந்த விளையாட்டு பற்றி தெரியாமல் என்ன செய்வது என்று புரியாமல் தத்தியாக விளையாண்டு மொத்தத்தையும் சொதப்புகிறார்கள்.
அதனால் நல்லா விளையாடவில்லை, பிசாசுகளாக இருக்க தகுதியில்லை என்று ஜாக்லின், அருண் மற்றும் சௌந்தர்யாவுக்கு ஓட்டு கிடைத்திருக்கிறது. இதில் ஜாக்லீனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக மஞ்சரி ஓட்டு போட்டதால் சிறைதண்டனை அனுபவிக்கும் விதமாக ஜாக்லின் ஜெயிலுக்கு போய் விட்டார்.
இந்த மொத்த விளையாட்டிலும் பாரபட்சமே பாக்காமல் உண்மையிலேயே பிசாசு போல் மஞ்சரி ஒவ்வொரு ஆட்டத்தையும் சொர்ணாக்கா மாதிரி விளையாடி வருகிறார். அதில் சில போட்டியாளர்கள் பலியடாக சிக்கித் தவிக்கிறார்கள். இதனை தாண்டி இன்று ஏஞ்சலாக இருப்பவர்கள் நாளை டேவிலாக மாறுவார்கள்.
அப்பொழுது டேவில் கொடுத்த இம்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாளை ஒவ்வொரு ஏஞ்சலும் அவஸ்தைப்பட போகிறார்கள். இதில் ஆனந்தி சைலன்டாக இருந்து ஒவ்வொருவருடைய மூளையை சலவை செய்து வருகிறார்.