கடந்த பிக் பாஸ் சீசன் 7-ல் டைட்டில் வின்னர் ஆனார் அர்ச்சனா. இவரும், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடிக்கொண்டு இருக்கும் அருணும் காதலர்கள் என்று ஊருக்கே தெரியும். ஆனால் சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.. நாங்க நல்ல நண்பர்கள்..” என்று மட்டுமே கூறியிருந்தார். அது ஒரு அப்பட்டமான பொய் என்று தெரிந்தாலும், தெரியாதது போல மக்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் பிக் பாஸ் அர்ச்சனாக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த அளவில், ஆரம்பத்தில், “எனக்கு யாரையும் hurt பண்ண தெரியாது.. ” என்று சொல்லிவிட்டு, இப்போது “அனைவரையும் ஓவராக கிண்டல் செய்து வருகிறார்..
இது மிகவும் முரண்பாடாக இருந்தாலும், entertaining ஆக இருப்பதால், ஒரு சிலர் ரசித்து வருகின்றனர்.
ஆசிட் அடிப்பேன்.. செஞ்சுருவேன்
ஆனால் ஒரு சிலருக்கு அவருடைய இந்த attitude சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் அர்ச்சனா எப்போதும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஏதாவது ஸ்டோரி அல்லது போஸ்ட் போடுவார்.
அப்படி சமீபத்தில் அவரை ஆதரித்து இவர் போட்ட போஸ்ட் வைரல் ஆனது. இதை பார்த்து தான் ஒரு சில மிக மோசமாக கமெண்ட் செய்துள்ளார்.
அதில் ஒருவர், ஆபாசமாக திட்டியது மட்டும் இன்றி, ஆசிட் வீசுவேன். என்று மிரட்டியுள்ளார். மேலும் ஒருவர், உடல் ரீதியாக அச்சுறுத்துவேன். என்று மிகவும் மோசமாக கமெண்ட் செய்துள்ளார். இது அர்ச்சனாவை பெருமளவு பாதித்துள்ளது.
உடனடியாக, அவர் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். அப்படி அவர் பகிரும், தான் இப்படி கமெண்ட் செய்தவர்கள், bigboss முத்துகுமாரனின் ஆர்மி என்று தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் முத்துக்குமரன் fan ஒருவர் தான் இவ்வளவு மோசமாக கமெண்ட் செய்துள்ளார்.
இதை பகிர்ந்த அர்ச்சனா, “நீங்கள் யாரது ஆதரவாளாராக வேண்டும் என்றாலும் இருங்கள்.. ஆனால் இப்படியான பேச்சுக்கள் மிகவும் அருவருப்பாகவும் வேதனை அளிக்கும் விதமாகவும் உள்ளது. எனது DM முழுவதும் இப்படி தான் உள்ளது.. ” என்று வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார்.