மிர்ச்சி ரேடியோவில் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டிய ஒரு நடிகர் தான் மிர்ச்சி சிவா. இவர் பேசுவதில், கருத்து இருக்கோ இல்லையோ. நிச்சயமாக காமெடி இருக்கும். அப்படி இவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்த நிலையில், இவருக்கு 12B படம் ஒரு ஜாக்பாட் ஆக அமைந்தது.
முதலில் இவருக்கு வாய்ப்பை கொடுத்தது இயக்குனர் வெங்கட் பிரபு தான். அவர் படங்கள் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, தமிழ் படம், கலகலப்பு படங்கள் மூலம் மக்கள் மத்தியில் ரீச் ஆனார். மேலும் இவரது வணக்கம் சென்னை படமும் அப்போதைய இளைஞர்களால் கொண்டாடப்பட்ட படமாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது இவர் நடிப்பில் சூது கவ்வும் 2 படம் ரிலீசாக உள்ளது. அந்த படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடந்துகொண்டு இருக்கிறது. அந்த ப்ரோமோஷனில் மிர்ச்சி சிவா சொன்ன விஷயம் பலரை ஷாக் ஆக்கியுள்ளது.
இயற்க்கை கொடுத்ததை இயற்கையே எடுத்துக்கொண்டது..
எப்படி இந்த மனிதர் இதை இவ்வளவு cool-ஆக சொல்கிறார் என்ற வியப்பையும் கொடுத்தது. இவர் ஆசையாக ஒரு BMW கார் வாங்கினார். அதுவும் யுவன் ஒரு முறை, இந்த கடையில் சென்று கார் வாங்கு என்று சொன்னதால் வாங்க சென்றுள்ளார்.
ஒரு கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் மிர்ச்சி சிவா சென்றாரே தவிர, BMW தான் வாங்க வேண்டும் எண்ணமெல்லாம் இல்லை.
ஆனால் அங்கு உள்ள ஒரு சேல்ஸ் மேன். சார்.. BMW கார் தான் உங்க தகுதிக்கு சரியா இருக்கும் என்று சொல்ல, அதில் கன்வின்ஸ் ஆகி வாங்கியுள்ளார். ஆனால் வெள்ளம் வந்தபோது, கார் அடித்துச்செல்லப்பட்டது. ” அதில் கொஞ்சம் வருத்தம் தான் இருந்தாலும், அதையே யோசிச்சு பீல் பண்ணிட்டு இல்ல.
இயற்க்கை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதித்து வாங்கினேன், அதை இயற்கையே எடுத்துக்கொண்டது அவ்வளவு தான்” என்று கூல் ஆக கூறியிருக்கிறார். எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி சாதாரணமா சொல்லுறாரு என்று ஒரு வியப்பை தான் இது கொடுக்கிறது.