VJ Manimegalai: சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை பின்பு விஜய் டிவி பக்கம் வந்தார். அங்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அவருடைய நகைச்சுவையான பேச்சும் செயலும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம். ஆனால் திடீரென ஆங்கராக தான் வருவேன் என தர்ணா செய்து வாய்ப்பை வாங்கினார்.
ஆனால் பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது விஜய் டிவியை விட்டு அவர் வெளியேறி இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பு அவர் செய்த தரமான சம்பவம் சோசியல் மீடியாவை பற்றி எரிய வைத்தது.
அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கிளம்பிய நிலையில் பிரியங்காவுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. அந்த பிரச்சனை எல்லாம் தற்போது ஓய்ந்த நிலையில் மணிமேகலை தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டு அனைவரையும் கவர்ந்துள்ளார்.
அதாவது தன்னுடைய சொந்த கிராமத்தில் அவர் ஒரு வீடு கட்டி வருவது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சென்னையில் பிரீமியம் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி அவர் தன் கணவருடன் கிரகப்பிரவேசம் செய்த போட்டோக்களை பகிர்ந்து உள்ளார்.
சொந்த வீடு வாங்கிய மணிமேகலை
அதில் அவர் எங்கள் திருமணத்திற்கு பிறகு நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். பத்தாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கவே சிரமமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் கஷ்டப்பட்டு இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்.
தற்போது சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கும் எங்களை வாழ்த்துங்கள் என பதிவிட்டுள்ளார். அதேபோல் அந்த பதிவின் இறுதியில் ஸ்ரீராமஜெயம் மாஷா அல்லாஹ் என குறிப்பிட்டு இருந்தது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்துவான மணிமேகலை உசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் இரு மத கடவுள்களையும் வழிபட்டு வருகின்றனர். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.