சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கேப்டன் பதவிக்கு போட்டி போடும் 4 பெஸ்ட் போட்டியாளர்கள்.. டெவிலா தேவதையா, வெற்றி யாருக்கு.?

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டெவில் தேவதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்கு முந்தைய சீசன்களில் கூட இந்த டாஸ்க் வந்தால் வீடு ரணகளமாக மாறிவிடும்.

ஆனால் இந்த சீசனில் அது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிலர் கொடுக்கப்பட்ட கேரக்டரில் இருந்து வெளியே வராமல் சிறப்பாக செய்தனர்.

அதேபோல் சிலர் அவ்வப்போது ஒரிஜினல் கேரக்டரை பிரதிபலித்து சொதப்பினார்கள். அதன்படி இந்த வாரம் சுவாரஸ்யம் இல்லாத நபர்களாக சௌந்தர்யா ஜாக்லின் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பிக் பாஸ் நான் கொடுக்கும் சாப்பாடு தான் சாப்பிட வேண்டும் என தண்டனை கொடுத்தார். அதன்படி உப்பு இல்லாத சாப்பாடு அவர்களுக்கு ஸ்பெஷலாக வந்தது.

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் யார் சிறப்பாக விளையாடினார்கள் என பிக் பாஸ் கேட்டார். அதற்கு போட்டியாளர்கள் மஞ்சரி மற்றும் தீபக் இருவரும் டெவிலாக சிறப்பான பர்பாமன்ஸ் கொடுத்தனர் என கூறினார்கள்.

கேப்டன் பதவிக்காக போட்டி போடும் 4 பேர்

உண்மையில் தீபக் யாரையும் உடல் ரீதியாகவோ ஓவராகவோ துன்புறுத்தவில்லை. ஆனாலும் ஒரு டெவில் எப்படி இருக்குமோ அப்படி தன் பங்கை சிறப்பாக கொடுத்தார்.

அதேபோல் மஞ்சரி இன்னொரு வகையான விளையாட்டை விளையாடினார். அதன்படி ரொம்பவும் அரக்கத்தனமாக நடந்து கொண்டதும் டாஸ்க்காக பார்க்கும்போது சிறப்பு தான்.

அதேபோல் தேவதைகளில் பவித்ரா மற்றும் ரஞ்சித் இருவரும் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் பவித்ராவை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.

மஞ்சரி அவ்வளவு கொடுமைப்படுத்திய போதும் கூட அவர் அனைத்தையும் தாங்கிக் கொண்டு டாஸ்கை சிறப்பாக செய்தார். இதுவே அவருக்கான வாக்குகளையும் அதிகப்படுத்தியது.

அதேபோல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டும் கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த நான்கு பேரும் அடுத்த வார கேப்டன் பதவிக்காக போட்டியிட இருக்கின்றனர்.

இதில் மஞ்சரி தீபக் இருவருக்கும் சரியான போட்டி இருக்கும் என தெரிகிறது. பார்ப்போம் யார் வெல்வார்கள் என்று.

Trending News