கோலிவுட், பாலிவுட் சினிமாக்கள் முன்னோடியாக இருந்து ஒரு காலம். ராஜமெளலியில் பாகுபலி1,2 & ஆர்.ஆர்.ஆர் வெளியான பின், அப்படங்கள் டிரெண் செட் ஆனது. பட்ஜெட்டிலும், பிரமாண்டத்திலும் இப்படங்கள் மாதிரி எடுக்க வேண்டும் என நினைத்து படமெடுத்து வருகின்றனர்.
தெலுங்கில், மற்ற மொழிகலை தாண்டி, வித்தியாசமான யோசிக்கின்றனர். வணிக எல்லையை விரிவாக்குகின்றனர். பட்ஜெட்டிற்குள் அருமையான படங்கள் எடுத்து பான் இந்தியா ஹிட்டாக்குகின்றனர். பாகுபலி 1, 2 பாகங்கள், ஆர்.ஆர்.ஆர் என இம்மூன்று படங்கள் உலகளவில் ரூ.3500 கோடி வசூலித்தாக கூறப்படுகிறது.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இசையமைப்பாளருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அதனால், இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளது தெலுங்கு சினிமா.
அதேபோல், பாலிவுட்டில் பதான், ஜவான் படங்களும், சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் படமும் புதிய உலகளாவிய வெற்றி, வணிய வியாபாரத்தை இந்திய சினிமாவை நோக்கி திருப்பியுள்ளது.
பதான் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல், ஜவான் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்தது. அனிமல் படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்போது சுகுமார் இயக்கிய புஷ்பா 2 படம் முதல் நாளிலேயே ரூ.250 கோடி வசூலித்துள்ளது. நிச்சயம் இப்படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டி விடும்.
தமிழில் திறமையான இயக்குனர்கள் இருந்தும் ஏன் இன்னும் முடியவில்லை?
தமிழில் ஷங்கர், மணிரத்னம் மாதிரி பெரிய இயக்குனர்கள் இருக்கின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இன்னும் ரூ.1000 கோடி வசூலை நெருங்கவில்லை. சிவா-சூர்யா கூட்டணியில் உருவான கங்குவா படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தெலுங்கு, பாலிவுட் பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தங்கள் படத்துக்கு கொடுக்கும் புரமோஷன் முக்கியத்துவம், விளம்பரங்கள் தான் இத்தனை பிரமாண்ட வசூலுக்கும் காரணம் என கூறப்படுகிறது. இதை கோலிவுட்டிலும் பரவும் என தகவல் வெளியாகிறது.