புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திருமணத்தை வியாபாரமாக்கும் ஒரு வியாதி நயன்தாராவுக்கு.. அதிர்ச்சியை கிளப்பிய பிரபலம்

விக்னேஷ் சிவன் – நயன்தாரா கடந்த 2022 ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண டாகுமெண்டரி நெட்பிளிக்ஸ் beyond the fairy tale என்ற பெயரில் ஓடிடி தலத்தில் ரிலீசானது.

இந்த டாகுமெண்டரியை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். நயன்தாரா பிறந்த நாளில் நவம்பர் 18 ஆம் தேதி இது நெட்பிளிக்ஸில் ரிலீசானது. இதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதில், நானும் ரவுடிதான் படத்தின் ஃபுட்டேஜை அனுமதின்றி பயன்படுத்தியதாக அப்படத் தயாரிப்பாளர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியினார்.

அந்த ஃபுட்டேஜ் பற்றி தனுஷிடம் அனுமதி கேட்தாகவும், அதற்கு அவர் மறுத்ததாக நயன்தாரா அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தார்.

டாகுமெண்டரியில் 37 நொடிகளுக்கு மேல் நானும் ரவுடிதான் ஃபுட்டேஜ் பயன்படுத்தப்பட்டதாக, தனுஷ் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு விளக்கம் கேட்டு, நயன்தாராவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நயன்தாராவை விமர்சித்த பிரபல விமர்சகர்

பத்திரிக்கையாளர் சேகுவேரா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில், “தனிப்பட்ட இருவரின் திருமணம் வியாபாரமானது நயன்தாராவால் தான்.

தன் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸை வாங்க வைத்தது அவர் தான். இப்போது திரை நட்சத்திரங்களும் இதைச் செய்து வருகின்றனர். அவர் தான் அந்த வியாதியைப் பரப்பியதாக” தெரிவித்துள்ளார்.

நயன் தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை தொடர்ந்து, நாகசைதன்யா-சோபிதா திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News