சூசு கவ்வும் 2 படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், மிர்ச்சி சிவா, நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
பா.ரஞ்சித், ” சென்னை 28 படத்தில் நான் பணியாற்றும்போது, மிர்ச்சி சிவாவும் அப்படத்தில் நடித்திருந்தார். அவர் திறமை இன்னும் வெளிப்படவில்லை. அந்த தருணத்திற்காக அவர் காத்திருக்கிறார். அவர் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறினார்.
மேலும், ”முதல் பட வாய்ப்புக்காக நானும் என் நண்பனும் சி.வி.குமாருக்கு எங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மின்னஞ்சல் செய்தோம். அதன் மூலம் வாய்ப்பு பெற்றோம்.
அதன்பின் சந்தோஷ் நாராயணனை சந்தித்தேன். அவர் கொடுத்த டியூன்கள் எனக்குப் பிடிக்கவில்லை. புதிய இசையுடன் அவர் போட்டுக் கொடுத்த டியூன்கள் பிடித்தது.
அதனால்தான் இன்று அவர் தனித்த அடையாளத்துடன் உள்ளார். அவரது திறமையை கண்டெடுத்த சி.வி.குமாருக்கு என் நன்றி” என்று தெரிவித்தார்.
எஞ்சாயி எஞ்சாமி பாடல் விவகாரத்தில், அறிவுக்கும், சந்தோஷ் நாராயணனுக்கும் சர்ச்சை ஏற்பட்டது. அதில் பா.ரஞ்சித் தெருக்குரல் அறிவுக்கு சப்போர்ட் செய்தார்.
இந்த விவகாரத்துக்குப் பின் இருவரும் மீண்டும் மேடையில் ஒன்றாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.