கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என்பது நீண்ட நாளாக, மக்களின் கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில், வரவைத்து படம் இயக்க இருந்த ரவிஇடம் தனக்கு புற்றுநோய் இருப்பதாக சிவராஜ் குமார் கூறியுள்ளார். ரவி இவரை வைத்து படம் இயக்குவதற்காக 4 வருடம் சிவராஜ் குமாரை follow செய்துள்ளார்.
அப்படி ஒரு நாள், தனது படத்தில் நடிப்பதை பற்றி அவரிடம் பேசும்போது தான் “தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது.. ” என்று கூறியுள்ளார். அதற்கான காரணத்தை கேட்டபோது தான் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளார்.
இவர்மீது பெருமளவு ரசிகர்களுக்கு மதிப்பு இருக்கும் நிலையில், தற்போது ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷிடம் சிபாரிசு
மேலும் தனக்கு இப்படியான ஒரு நோய் உள்ளது என்பதை அவரிடம் கூறியது மட்டும் இன்றி, “எனக்காக நீங்கள் காத்திருந்தீர்கள்.. ஆனால் நான் இப்போது இதில் நடிக்கும் சூழ்நிலையில் இல்லை..
நான் வேண்டுமென்றால் தனுஷிடம் பேசுகிறேன், அவர் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்..” என்று கூறியுள்ளார்.
அவர் நினைத்திருந்தால், இதை என்னால் பண்ண முடியாது, நீங்கள் வேறு யாரையாவது வைத்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கலாம்.
ஆனால் அவர் தனக்காக காத்திருந்த இயக்குனருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனுஷிடம் இந்த இயக்குனரை சிபாரிசு செய்துள்ளார். சமீப காலமாக இவர் பற்றி வெளியாகும் தகவல்கள், இவரை வானுயரத்துக்கு உயர்த்தி வைத்துள்ளது.