சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

உயிரை பணயம் வைக்கும் அந்த 24 மணி நேர பந்தயம்..  அஜித் எடுக்க போகும் ரிஸ்க்

விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகி விட்டது. மேலும் அந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சிகளுக்கான ஷூட்டிங் மட்டும் பெண்டிங் உள்ளது.

இந்த நிலையில், வேகமாக தனது இரண்டு படத்தின் வேலைகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் அஜித். காரணம் அவர் கார் ரேஸிங்-க்கு தயாராகி வருகிறார்.

இந்த முறை அஜித் வெறும் racer மட்டும் அல்ல, ஆனால் ஒரு டீம்-ன் தலைவனாகவும் இருக்கிறார். ஏற்கனவே இந்த கார் ரேஸ் பயிற்சிக்காக ஸ்பெயின் சென்றிருந்தார்.

அங்குள்ள பார்சிலோனா F1 கார் ரேஸ் தளத்தில் தனது பெயர் கொண்ட காருடன் அஜித் குமார் நிற்கும் புகைப்படங்கள் வைரலானது.

இந்த நிலையில் இந்த போட்டி, ஜனவரி மாதம் துபாயில் வைத்து நடக்கிறது. Porsche GT3 RS காரில் தான் அஜித் போட்டி போட போகிறார். இதை 4 கோடி ரூபாய்க்கு அஜித் வாங்கியுள்ளார்.

மேலும் தனது racing டீம்-க்கு அஜித் குமார் ரேஸிங் என்று பெயரும் வைத்துள்ளார். தற்போது இந்த ரேஸிங்-க்காக கடுமையான பயிற்சியை எடுத்து வருகிறார்.

24 மணி நேரம் தொடர்ந்து பயணிக்க போகும்

இந்த போட்டியில் அஜித் 24 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்ட போகிறார். இடையில், சாப்பிடுவதற்கான ஓய்வு மட்டும் தான். மேலும் டீசல் filling டைம்-ல் மட்டும் தான் அவர் ரெஸ்ட் எடுக்க முடியும்.

இந்த வேலைகள் அனைத்தையும் அவரது டீம் அவருக்கு உறுதுணையாக செய்துகொடுக்கிறார். கண்டிப்பாக கடுமையான போட்டி இருக்கும் என்பதை முன்பே கணித்த அஜித், அதனால் தான் பட வேலைகளை வேகமாக முடித்துக்கொண்டு இருக்கிறார்.

இதற்க்கு நடுவில், அவ்வப்போது, கார் racing-க்கான பயிற்சியும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

Trending News