ஸ்ரீ லீலாவுக்கு தற்போது பயங்கரமாக மவுசு கூடியுள்ளது. அவரது நடனம் பட்டிதொட்டியெங்கும் ட்ரெண்ட் ஆக, இயக்குனர்கள் அவரை ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடச்சொல்லி கேட்டு வருகின்றனர்.
பெரிய ஹீரோக்கள் என்றால், அவர் ஓகே சொல்கிறார், இல்லையெனில் முடியாது என்று கூறிவிடுகிறார். புஷ்பா 1 படம் வெற்றி அடைய சமந்தா போட்ட ஆட்டம் ஒரு முக்கிய காரணம்.
இந்த நிலையில் இரண்டாவது பாகத்திலும் அதே போல ஒரு பாட்டு வேண்டும் என்று இயக்குனர் முடிவு செய்தார். முதலில் இந்த பாடலில் ஷ்ரத்தா கபூரை தான் ஆட வைக்கலாம் என்று நினைத்தார்கள்.
ஆனால் ஷ்ரத்தா கபூர் ஒரு பாடலுக்கு மட்டும் என்றெல்லாம் ஆடமுடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
ஸ்ரீ லீலா வாங்கிய சம்பளம்
இதை தொடர்ந்து, ஸ்ரீ லீலாவை கமிட் செய்தார்கள். முதலில் தயங்கியவர், பின்பு lump-ஆக ஒரு அமௌன்ட் வாங்கி கொண்டு நடித்தார்.
இதை தொடர்ந்து, இந்த விஷயம் விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை கூட ஏற்படுத்தியது. ஏன் என்றால் மட்ட பாடலில் முதலில் ஸ்ரீ லீலாவை தான் ஆடவைக்க முடிவு செய்தார் வெங்கட் பிரபு.
ஆனால் ஹீரோயினாக அறிமுகமாகும் நேரத்தில் ஒரு பாட்டுக்கு எல்லாம் ஆடமுடியாது என்று கூறிவிட்டார். இப்படி இருக்க, அல்லு அர்ஜுன் கூட மட்டும் ஆடுவீங்களா?
ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் அவர் அவர் வேலையை பார்த்தார். இந்த நிலையில், இந்த படத்துக்கு ஆட்டம் போடா, அவர் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியானது.
அப்படி அல்லு அர்ஜூனுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட, அவர் 2 கோடி ரூபாய் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அடேங்கப்பா ஒரு பாட்டுக்கே 2 கோடியா.. என்று அசந்துபோய்விட்டார்கள்
மேலும் ஸ்ரீ லீலா சிவகார்த்திகேயன் காம்போ படத்தை தமிழ் ரசிகர்கள் தீவிரமாக எதிர்நோக்கி இருக்கின்றனர்.