அருண் விஜய் எல்லா திறமைகளும் இருந்தும் சினிமாவில் ஜெயிக்க இத்தனை காலம் ஆகி உள்ளது. 47 வயதான அவர் 1995 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தடம் பதித்தார்.
முறை மாப்பிள்ளை படத்திற்கு பிறகு இன்று வரை ஒரு ஆண்டு கூட இவரது படம் வெளிவராமல் இருந்தது கிடையாது.
வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் நடித்துக் கொண்டுதான் இருந்தார். பாண்டவர் பூமி, இயற்கை, என சாக்லேட் பாயாக வளம் வந்தார்.
லவ்வர் பாய் என சினிமா, இவருக்கு முத்திரை குத்தப்பட்டது. டான்ஸ், சண்டை என அனைத்திலும் இவர் கைதேர்ந்தவர் அமெரிக்காவெல்லாம் சென்று சண்டை கற்று வந்திருக்கிறார்.
தடையற தாக்க, என்னை அறிந்தால், குற்றம் 23, தடம் என செகண்ட் இன்னிங்ஸில் இவரது கேரியர் உச்சத்துக்கு சென்றது. இந்த படங்கள் ஹிட் அடித்தாலும் கூட இவரது சம்பளம் அதே அளவில்தான் இருந்தது.
இப்பொழுது ராயனுக்குப் பின் தனுஷ் அடுத்து இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார்.
இதற்கு அவருக்கு 8 கோடிகள் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதுதான் அவர் கேரியர் பெஸ்ட் சம்பளம்.