சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நெல்சன் போட்ட கண்டிஷன்ல ஆடிப்போன சன் பிக்சர்ஸ்.. நம்பிக்கை இல்லாத ரஜினியும் இதுக்கு உடந்தை

ரஜினி திருவல்லிக்கேணியில் கூலி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை இயக்கும் லோகேஷ் ஒவ்வொரு நாளும் புது புது நடிகர்களை இந்த படத்திற்கு கொண்டு வருகிறார்.

இந்தப் படம் கிட்டத்தட்ட 70% முடிந்தது இன்னும் ஓரிரு மாதங்களில் முழுவதும் முடிந்து விடும். இதற்கு பின்னர் ரஜினி மாஸ்டர் கிளாஸ் ஹிட் அடித்த படம் ஜெய்லர், அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனத்தை செலுத்த உள்ளார்.

நெல்சன் இயக்கப் போகும் ஜெய்லர் 2 படத்தில் ரஜினிகாந்த் நம்பிக்கை இல்லாமல் இருந்து வருகிறார். பொதுவாக இரண்டாம் பாகம் படம் என்றால் மக்களிடையே சுவாரசியத்தை குறைக்கிறது அதனால் ரஜினிக்கு இதில் முழு நாட்டமில்லை என தெரிகிறது.

நெல்சன் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 13 மாதங்கள் சன் பிக்சர்ஸ் இடம் அவகாசம் கேட்டிருக்கிறார். அப்பொழுதுதான் படம் முழுவதும் நீங்கள் நினைக்கிற மாதிரி வரும் என பழிச்சென்று கூறி செக் வைத்து விட்டாராம்..

இரண்டாம் பாகம் படங்கள் மீது நம்பிக்கை இல்லாத ரஜினியும் ஏதோ புதுசா செய்கிறார் என ஓகே சொல்லிவிட்டார். சன் பிக்சர்ஸ் இதற்கு அனுமதி கொடுத்து விட்டால் 13 மாதங்கள் வைத்து செதுக்கப் போகிறார் நெல்சன்.

2026 ஏப்ரல் மாதத்தில் தான் இந்த படம் ரிலீசாக போகிறதாம்.ஒரு வருடம், ஒரு மாதம் இந்த படத்திற்கான வேலைகள் நடைபெற உள்ளது. ரஜினியையும், சன் பிக்சர்ஸ்சை யும் திருப்திப்படுத்திய பிறகு தான் நெல்சன் வேலையை முடிப்பாராம்.

Trending News