திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு.. கோவா கேங்குக்கு வேப்பிலை அடித்த விஜய் சேதுபதி

Biggboss 8: ரொம்ப நாள் கழிச்சு பிக் பாஸ் ப்ரோமோவை பார்த்து ஆடியன்ஸ் ஃபயர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் விஜய் சேதுபதி அனல் பறக்க பேசினார்.

ஆனால் போகப் போக அவர் கேட்க வேண்டிய விஷயத்தை தட்டிக் கேட்கவில்லை. இது கடந்த சில வாரங்களாக விமர்சனமாக இருந்தது.

ஆனால் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோக்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் தற்போது வந்துள்ள புரோமோவில் அவர் கோவா கேங்கை பொளந்துவிட்டார்.

விஜய் சேதுபதியிடம் சிக்கிய கோவா அணி

மாத்தி மாத்தி உங்களுக்குள்ள விட்டுக் கொடுக்க தயாரா இருக்கீங்க. அப்படின்னா கதவை திறக்க சொல்றேன் வெளியில வாங்க. இங்க வந்து சப்போர்ட் பண்ணுங்க.

ஆனா வீட்டுக்குள்ள இருந்து ஆட்டத்த கெடுக்காதீங்க. அது பாக்க நல்லா இல்ல என மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிவிட்டார்.

இதனால் ஜாக் தெரசா குட்டி தெரசா முகம் கருத்து போய்விட்டது. அந்த அளவுக்கு இவர்கள் இருவரும் இந்த வாரம் தலைகனத்துடன் இருந்தார்கள்.

இதன் பிறகாவது அவர்கள் தனித்தனியாக கேம் விளையாடினால் நல்லது. இல்லை என்றால் விரைவில் ஒவ்வொருவராக வெளியேறக் கூடும்.

Trending News