செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கங்குவா படத்தால் எல்லாம் போச்சு? சூர்யா எடுக்கும் கடைசி பிரம்மாஸ்திரம்

கங்குவா செம ஹிட்டாகும், 2000 கோடி வசூல் குவிக்கும் என நினைத்திருந்தனர். ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று, எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை என தெரிகிறது.

சூர்யா – சிவா கேரியரில் இருவருக்கும் அதிக நெகட்டிவ் கமெண்ட்கள் கொடுத்த படமாக அமைந்தது. நெட்டிசன்களால் ட்ரோலுக்கும் செய்யப்பட்டது. இதிலிருந்து இப்பொழுதுதான் படக்குழு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்திலும், சூர்யா 45 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

கங்குவாவால் நெருக்கடியில் சூர்யா?

கங்குவா படத்தினால் ஞானவேல் ராஜாவுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைச் சரிசெய்ய, ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

முந்தைய படம்போல் இல்லாமல், நல்ல ஒரு ஹிட் பட இயக்குனரை வைத்து புதிய படத்தை தயரிக்கவுள்ளனர். அஜய் ஞானமுத்து, கவுதம் வாசுதேவ் மேனன் இருவரிடம் பேசி வருகிறார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

பல படங்கள் தயாரித்து லீடிங் புரடியூசராக இருக்கும் ஞானவேல் ராஜாவுக்கு கங்குவாவால் இதுவரை பெரிய நஷ்டம் என்று பேச்சு அடிபடுகிறது. சூர்யாவும் அடுத்த படத்தில் ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Trending News