வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புஷ்பா 2 பின்னணி இசை.. டென்சனாகி அஜித்தை துணைக்கு அழைத்த சாம் சி.எஸ்.. என்ன நடந்துச்சு?

அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது புஷ்பா 2. உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

படம் ரிலீசாகி பாடல்கள் முதல் பாகம் போல் இல்லை. ஆனா பின்னணி இசை சூப்பர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரிலீஷுக்கு முன், சென்னை புரமோசனின் போது என் மீது தப்பில்லை என தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பாளரை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

புஷ்பா 2 பட இசையமைப்பாளர் மாற்றம் என தகவல் வெளியானது. ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் இசை – பின்னணி இசை தேவி ஸ்ரீ பிரசாத்; கூடுதல் பிஜிஎம் சாம்.சிஎஸ் என்று வருகிறது. இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தேவிஸ்ரீ பிரசாத் படம் தான். ஆனால் இதில் 90 காட்சிகளுக்கு நான்தான் பின்னணி இசையமைத்தேன் என்று சாம் சி.எஸ் கூறினார்.

அஜித்தின் வரிகளைப் பதிவிட்ட சாம் சி.எஸ்

இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தன் சமூக வலைதள பக்கத்தில் அவர், ’மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி’ என்ற வைரமுத்து வரிகளைப் பதிவிட்டுள்ளார்.

இது அஜித்தின் அமர்க்களம் படத்தில் வரும் மேகங்கள் என்னைத் தொட்டு போவதுண்டு பாடலின் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 படத்திற்கு பிஜிஎம் சூப்பராக அமைத்தும் தனக்கு அந்த முழு கிரிடிட் கிடைக்கவில்லை என சாம் சிஎஸ் இப்படி பதிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சினிமாவில் சொந்தமாக முன்னேறி தன்னம்பிக்கைக்கு உதாரணமாய் இருக்கும் அஜித்தின் பாடல் வரிகளை சாம் சிஎஸ் மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அவரது திறமையும் ஒரு நாள் நிச்சயம் தெரியும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Trending News