Swasika: இப்போதெல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள் தான் மாஸ் காட்டி வருகிறது. ஆனாலும் சிறு பட்ஜெட்டில் கதை தரமாக இருந்தால் வெற்றியை தடுக்க முடியாது.
அதை நிரூபித்து காட்டிய படம் தான் லப்பர் பந்து அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலும் பார்த்தது.
அதில் கெத்து கேரக்டரில் நடித்த தினேஷ் கொண்டாடப்பட்டார். ஆனால் அவரை தாண்டி அவருடைய மனைவி யசோதையாக வரும் சுவாசிகா பலரின் கவனத்தையும் கவர்ந்து விட்டார்.
ஏற்கனவே தமிழில் சில படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனாலும் இந்த படம் அவரை ஓவர் நைட்டில் பிரகாசம் அடைய செய்து விட்டது.
அதைத்தொடர்ந்து தற்போது சூர்யா 45 படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஆர் ஜே பாலாஜி இயக்கும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
போல்டானா கேரக்டரில் அசத்திய சுவாசிகா
இந்த நிலையில் சுவாசிகா மலையாள சதுரம் படத்தில் போல்டான ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதாவது வயதானவரை திருமணம் செய்து கொள்ளும் இளம்பெண்ணாக அவர் வருவார்.
கணவன் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் ஒரு இளைஞர் அவரை பார்த்துக் கொள்ள வேலைக்கு வருவார். அவருடன் கணவர் கண் முன்பே சுவாசிகா ரிலேஷன்ஷிப்பில் இருப்பார்.
இந்த படத்தில் அந்தரங்க காட்சியும் இருக்கும். அதில் அவர் போல்டாக நடித்திருப்பார். மொத்தத்தில் இந்த படம் அவரை வேறொரு கோணத்தில் காட்டி இருக்கும்.
அதை தற்போது குறிப்பிட்டு வரும் ரசிகர்கள் கெத்து பொண்டாட்டி எந்த கேரக்டரா இருந்தாலும் கலக்குறாங்க. தமிழ் சினிமாவுக்கு திறமையான இன்னொரு நடிகை கிடைச்சாச்சு என பாராட்டி வருகின்றனர்.