வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலித்த டாப் 10 படங்களின் லிஸ்ட்

இந்திய சினிமாவில் பிரமாண்ட படம் எடுக்க சிறந்த கதை, திரைக்கதை, மக்கள் ரசிக்கும்படியான காட்சிகள் இருந்தால் போதும் என்பதை முதலில் நிரூபித்தது பாகுபலி.

ராஜமெளலியின் பாகுபலி 1,2 ஆகிய படங்கள் பான் இந்தியா படமாக வசூலில் கலக்கியது. உலக மார்க்கெட்டிலும் இந்திய சினிமாவை தடம் பதிக்க வைத்தது.

பாகுபலி 2 படம் தான் முதன் முதலில் ரிலீசான முதல் நாளில் 200 கோடி வசூலித்தது. அதன்பின் பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டில் முதல் நாளில் அந்த சாதனையைப் படைக்கவில்லை.

அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா 2. இப்படம் பாகுபலி 2 வை விட முதல் நாளில் 294 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இது டோலிவுட்டில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் முதல் நாளில் 294 கோடி வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது ஒரு பெஞ்ச் மார்க்.

இனி வரும் படங்கள் புஷ்பா 2 படத்தில் ரெக்கார்டை முறியடிக்க முயற்சிக்கும்.

முதல் நாளில் அதிக வசூல் குவித்த டாப் 10 படங்கள்

எனவே இந்திய சினிமாவில் முதல் நாளில் ரிலீசாகி அதிக வசூலித்த டாப் 10 படங்கள் ;

புஷ்பா – 294 கோடி, ஆர்.ஆர்.ஆர் – 223 கோடி, பாகுபலி – 210 கோடி, கல்கி ஏடி – 191 கோடி, சலார் – 178 கோடி, தேவரா -172 கோடி, கேஜிஎப் 2 – 160 கோடி

லியோ – 148 கோடி, ஆதி புரூஷ் -140 கோடி, சாஹோ 130 கோடி இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் தெலுங்குப் படங்களே உள்ளன.

இதில், பாலிவுட் படம் ஆதிபுரூஷ் 9வது இடத்திலும், லியோ 8வது இடத்திலும் உள்ளன. தமிழ் சினிமாவில், விஜய், ரஜினி, ஷங்கர், அஜித், மணிரத்னம்,கமல் உள்ளனர்.

இந்த ஜாம்பாவான்களினால் தமிழ் படம் அந்த சாதனையை முறியடிக்குமா என பார்க்கலாம்.

Trending News