Veera Dheera Sooran Teaser: தங்கலான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விக்ரம் தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். அருண்குமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் என பல ர் இதில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகம்தான் தற்போது வெளிவர இருக்கிறது.
இதுவே புதுமையாக இருக்கும் நிலையில் ஏற்கனவே டைட்டில் டீசர் வரவேற்பு பெற்றது. அதை அடுத்து தற்போது படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
அதில் வரும் 2025 ஜனவரி படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.. அப்படி என்றால் பொங்கலுக்கு விடாமுயற்சியுடன் மோதுகிறதா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க தற்போது டீசர் அதிக கவனம் பெற்றுள்ளது. அதில் விக்ரம் மனைவி மீது அதிக காதல் கொண்டவராக காட்டப்படுகிறது.
அதை அடுத்து எஸ் ஜே சூர்யா விரைப்பான போலீஸ் அதிகாரியாக மிரட்டுகிறார். அதில் அவர் விக்ரமை கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.
அதேபோல் விக்ரம் காவல்துறைக்கு தண்ணி காட்டும் காட்சிகளும் அதிரடியாக இருக்கிறது. இப்படி விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் வெளிவந்துள்ள டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.