வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வடிவேலுவை காக்க வைத்த Fahadh Fasil.. அட காலக்கொடுமை

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலுவும் Fahadh Fasil-ம் இணைந்து நடிக்கும் படம் மாரீசன். மாமன்னன் பட வெற்றியை தொடர்ந்து, இவர்கள் காம்போவில் இந்த படம் உருவாகவுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்த வரையில், எப்படியாவது தளபதியை வைத்து தனது 100-ஆவது படத்தை எடுத்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள்.

ஆனால் அது நடைபெறாமல் போய்விட்டது. இந்த நிலையில், இவர்கள் காம்போ நிச்சயம் வெற்றி அடையும், என்ற நம்பிக்கையில் மாரீசன் படத்தை தயாரிக்க முன்வந்தது சூப்பர் குட் பிலிம்ஸ். நாகர்கோவிலில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது.

வடிவேலுவை காக்க வைத்த Fahadh Fasil..

படம் 2025-ல் வெளியாகவிருக்கும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்-கை ஏற்கனவே முடியவிருந்த தருவாயில் Fahadh Fasil கால் ஷீட் கிடைக்காத காரணத்தினால், படம் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் ஷூட்டிங் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Fahadh Fasil பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், அவரால் மாரீசன் படத்துக்காக நேரம் ஒதுக்கவே முடியவில்லை. ஆனால் வடிவேலு Free-யாக தான் இருந்துள்ளார். இவருக்காக வடிவேலு காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது தான் Fahadh Fasil கால்ஷீட் கிடைத்து, படத்துக்கான கடைசி கட்ட படப்பிடிப்பை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கவிருக்கிறார் படக்குழுவினர். படம் நிச்சயமாக ஜாலியான அதே நேரத்தில் திகிலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Trending News