வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எதிர்நீச்சல் 2 ப்ரோமோவை வெளியிட்ட சன் டிவி.. ஜீவானந்தம் வாடகை கொடுத்து வந்தது வீண் போகலை

Ethirneechal 2 Serial: சன் டிவியில் அவசர அவசரமாக முடிந்து போன எதிர்நீச்சல் சீரியலை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் முதல் பாகத்தில் உள்ள கதையின் தாக்கமும், ஆர்டிஸ்ட்களின் எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தது தான். அந்த வகையில் இயக்குனர் திருச்செல்வம் மறுபடியும் எதிர்நீச்சல் 2 நாடகத்தை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் ஆதங்கத்தை தெரிவித்து வந்தார்கள்.

அதை நிறைவேற்றும் விதமாக சன் டிவி தற்போது எதிர்நீச்சல் 2 ப்ரோமோவை வெளியிட்டு விட்டது. இந்தா வருது அந்தா வருது என்று சொல்லிக் கொண்டு இருந்த நாடகத்தை மீண்டும் பார்ப்பதற்கு நேரம் நெருங்கி விட்டது. அந்த வகையில் 9:00 மணிக்கு தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சிங்க பெண்ணே சீரியலுக்கு பதிலாக எதிர்நீச்சல் சீரியலை கொண்டு வரப் போகிறார்கள்.

அதற்கு பதிலாக சிங்க பெண்ணே சீரியலை 9:30 மணிக்கு மாற்றப் போகிறார்கள். அத்துடன் நான்கு மருமகளும் அவர்களுடைய இலட்சியத்தை போராடி அடையும் விதமாக மறுபடியும் காலடி எடுத்து வைத்து விட்டார்கள். ஆனால் ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்னவென்றால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மதுமிதா என்ற ஜனனிக்கு பதிலாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பார்வதி, ஜனனி கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

அத்துடன் இந்த பிரமோவை பார்க்கும் பொழுது நமக்கு இன்னொரு விஷயத்தை ஞாபகப்படுத்துவது என்றால் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். அவர் தற்போது இல்லையென்றாலும் அவருடைய ஞாபகங்கள் மட்டும் எப்போதும் நீங்காத ஒரு இடத்தை பிடிக்கும் என்பதற்கு சான்றாக எதிர்நீச்சல் சீரியல் மறுபடியும் துவங்கியிருக்கிறது.

மேலும் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் குணசேகரன் இருந்த அதே வீட்டில் தான் நடைபெறப்போகிறது. அதனால் தான் முதல் பாகம் முடிந்த பிறகு கூட அந்த வீட்டிற்கு வாடகை கொடுத்து வந்துட்டு இருப்பதாக ஒரு பேட்டியில் இயக்குனர் தெரிவித்து இருந்தார்.

அதனால் அவர் வாடகை கொடுத்தது வீண் போகலை என்பதற்கு ஏற்ப இரண்டாம் பாகம் வெற்றிகரமாக துவங்கிவிட்டது. அதே வேகத்துடன் உற்சாகத்துடன் களமிறங்கும் நான்கு மருமகள்களின் வெற்றி பயணம் இனிதே தொடங்கப் போகிறது. ஆனால் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த ராமமூர்த்திக்கு பதிலாக வேறு ஒரு ஆர்டிஸ்ட் நடிக்கப் போகிறார்.

இவர்களைத் தொடர்ந்து பட்டம்மாள், விசாலாட்சி, ஞானம், கதிர், சக்தி மற்றும் ஜீவானந்தம் என அனைவரையும் மீண்டும் பார்ப்பதில் மிகப்பெரிய சந்தோசம் தற்போதே உண்டாகிவிட்டது. அத்துடன் எதிர்நீச்சல் 2 வந்த மாதிரி இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் இன்னொரு நாடகமும் கூடிய விரைவில் வந்துவிடும்.

Trending News