செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு பிரைம் டைம் ஒதுக்கிய சன் டிவி.. இனி சூடு பிடிக்கப் போகும் டிஆர்பி, ஓடப் போகும் குணசேகரன்

Ethirneechal: இந்தா வருது அந்தா வருது என்று சொல்லிக்கொண்டிருந்த எதிர்நீச்சல் 2 தற்போது எதிர்பார்க்காத நேரத்தில் ப்ரோமோவாக வெளிவந்துவிட்டது. ஆனால் இதில் ரேணுகா, நந்தினி மற்றும் ஈஸ்வரி கதாபாத்திரங்களை அப்படியே கொண்டு வந்த இயக்குனர், ஜனனி கதாபாத்திரத்திற்கு பதிலாக பார்வதி கேரக்டரை உள்ளே கொண்டு வந்து விட்டார். இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் தேவயானியின் மருமகளாக நடித்தார்.

பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய தொகுப்பாளனி. அப்படிப்பட்ட இவருக்கு சன் டிவி மூலம் சீரியலில் நடிக்க முதல் முறையாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது எத்தனையோ சீரியல்கள் போய்க்கொண்டிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு. அந்த வகையில் எதிர்நீச்சல் 2 ப்ரோமோவை பார்த்த மக்கள் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் எப்பொழுது இந்த நாடகம் ஒளிபரப்பாக போகிறது என்று பார்த்தால் டிசம்பர் 30ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு வரப்போகிறது. ஏற்கனவே டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி தான் சிம்மாசனத்தில் இருக்கிறது. இனி இன்னும் அதிக அளவில் சூடு பிடிக்கும் விதமாக எதிர்நீச்சல் 2 ஒட்டு மொத்த மக்களையும் கவரப்போகிறது. அதே நேரத்தில் இந்த நாடகத்திற்கு பில்லர் ஆக இருந்த குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்விக்குறி இருக்கிறது.

ஆனால் நிச்சயமாக வேல் ராமமூர்த்தி வரமாட்டார், அவருக்கு பதிலாக நடிகர் பசுபதி வர வாய்ப்பு இருக்கிறது. யார் குணசேகரன் வந்தாலும் இந்த முறை மருமகள் கையில் மாட்டிக் கொண்டு தலை தெறிக்க ஓடப் போகிறார். அந்த அளவிற்கு கதை நெருப்பாக பற்றி எறிய போகிறது.

Trending News