Siddharth : சித்தார்தின் பேச்சு பலமுறை சர்ச்சையாகி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பிரமோஷனில் கலந்துகொண்டு புஷ்பா 2 படம் பற்றி சித்தார்த் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதாவது சித்தார்த் நடிப்பில் மிஸ் யூ என்ற படம் உருவாகி இருக்கிறது.
இப்போது புஷ்பா 2 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மிஸ் யூ படமும் வெளியாவதால் சித்தார்த் அல்லு அர்ஜுன் உடன் மோதுவது பற்றி தனக்கு பயமில்லை என்று கூறி இருக்கிறார். அதாவது சமீபத்தில் பீகாரில் புஷ்பா 2 நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் கிட்டத்தட்ட பல லட்சம் பேர் கூடியிருந்தனர். அல்லு அர்ஜுனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பது பற்றி சித்தார்த்திடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சித்தார்த் கூட்டம் கூடுவது என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல.
அல்லு அர்ஜுனை விமர்சித்த சித்தார்த்
சாதாரணமாக ஒரு ஜேசிபி தோண்டினால் கூட அங்கு கூட்டம் கூடுவார்கள். அதோடு இந்தியாவைப் பொறுத்தவரையில் கூட்டம் கூடுவதை வைத்து ஒருவரின் தரத்தை நாம் சொல்லி விட முடியாது. அதுவும் அரசியல் கட்சி கூட்டங்களில் அவ்வளவு மக்கள் பங்கு பெறுகிறார்கள்.
அதெல்லாம் குவாட்டர் பாட்டில் மற்றும் பிரியாணிக்கு தான். அப்படிப் பார்த்தால் எல்லா அரசியல் கட்சியும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதனால் கூட்டத்தை வைத்து அந்த படம் வெற்றி பெறும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது என சித்தார்த் கூறியிருந்தார்.
அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சித்தார்த்துக்கு எதிராக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதோடு அல்லு அர்ஜுன் மீது பொறாமையில் சித்தார்த் பேசுகிறார் என்றும் கூறி வருகின்றனர்.