திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இந்த வாரமும் டபுள் எவிக்ஷன், பாதியிலேயே வெளியேறப் போகும் போட்டியாளர்.. பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்

Bigg Boss 8 Tamil Double Eviction: பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் ஒன்பது வாரங்கள் முடிந்த நிலையில் பத்தாவது வாரம் துவங்கியாச்சு. இன்னும் 35 நாட்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்களை இரண்டு பேராக எலிமினேட் பண்ணினால் மட்டுமே டாப் 5 போட்டியாளர்களை கடைசியில் கொண்டுவர முடியும். அதனால் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக ஆர்ஜே ஆனந்தி மற்றும் சாட்சனா எலிமினேட் செய்யப்பட்டார்கள்.

அதே மாதிரி இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெறப்போகிறது. ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் பிக் பாஸ். அதாவது பாதியிலேயே ஒரு போட்டியாளர்களை எலிமினேட் பண்ணி வீட்டை விட்டு அனுப்பப் போகிறார்கள். அந்த வகையில் இந்த வாரத்தில் நாமினேஷனுக்கு தேர்வான போட்டியாளர்களில் அதிக ஓட்டுகளை பெற்று முதலிடத்தில் இருப்பது பவித்ரா.

இரண்டாவதாக சௌந்தர்யா, மூன்றாவது ஜாக்லின், அடுத்ததாக அன்சிதா, ரயான், விஷால் மற்றும் அருண் என அடுத்தடுத்த வரிசையில் இருக்கிறார்கள். இதில் கம்மியான ஓட்டுகளை பெற்று கடைசியில் இருப்பது சத்தியா மற்றும் தர்ஷிகா. அந்த வகையில் மிட் வீக் எவிக்ஷனாக பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு சத்தியா வெளியேறப் போகிறார்.

கிட்டதட்ட 65 நாட்கள் கடந்த நிலையில் சத்யா பெருசாக அங்கே தென்படவில்லை. ஏதோ இங்கிருந்து நம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது போல வீட்டுக்குள்ளே இருந்து சண்டை சச்சரவர்களை பார்த்து கொண்டு வருகிறார். ஏதோ ஒரு அதிர்ஷ்டவசமாக இத்தனை நாளாக தப்பித்து வந்த சத்தியா இந்த முறை வீட்டை விட்டு வெளியேறப் போகிறார். அத்துடன் நாம் ஒரு டஃப்பான போட்டியாளர் என்ற நினைப்பில் விளையாடி வரும் தர்ஷிகாவும் இந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டை விட்டு போகப் போகிறார்.

Trending News