விஜய் சேதுபதி டபுள் எனர்ஜியோடு வேலை செய்து கொண்டிருக்கிறார். மகாராஜா படம் கொடுத்த தெம்பால் மனுஷன் காட்டில் கொட்டோ கொட்டுன்னு பெய்கிறது அடைமழை. அவரின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை 2 படம் இந்த மாதம் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகுது.
தற்சமயம் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்குவதால் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். மகாராஜா படத்தால் அடுத்தடுத்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் விஜய் சேதுபதி இனிமேல் துண்டு துக்கடா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். கேமியோ ரோல். வில்லன் கதாபாத்திரம் வேண்டாம் என்று இருந்தவரை இப்பொழுது மீண்டும் விதி வளைத்து போட்டு உள்ளது.
சூர்யா 44 படத்திற்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவருக்கு ஒரு பெத்த சம்பளத்தை பேசியுள்ளனர். விஜய் சேதுபதி இவ்வளவு பிஸியாக இருந்தாலும் கஜானா ரொம்புகிறது என சம்மதம் தெரிவித்துவிட்டார்.
அது மட்டும் இன்றி ஏற்கனவே பிக் பாஸ் எபிசோடில் அவர் உளவியல் ரீதியான ஒரு விஷயத்தை கூறியிருந்தார். சில பேர் தங்களுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காக உள்ளுக்குள் உள்ள கோபத்தை வெளியில் காட்டாமல் இருப்பார்கள். அப்படி இருப்பது பெரிய ஆபத்து என்று கூறியிருந்தார்.
இப்படி அவ்வப்போது வில்லன் கதாபாத்திரங்கள் நடித்து அந்த கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தான் இப்படி நடிப்பதால் மன அழுத்தம் குறைந்து மிகவும் ரிலாக்ஸாக மாறி விடுவதாகவும் தெரிவித்திருந்தார். ஒரே கல்லில் கோபத்துக்கும், கஜானாவுக்கும் தீனி போட்டுள்ளார் மக்கள் செல்வன்.