வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

படம் எதுவும் எடுத்த மாதிரி தெரியல.. முழு நேர தொழிலதிபரான விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தான். அந்த படத்தை தொடர்ந்து தற்போது கிட்டத்தட்ட 8 மாதத்துக்கு மேலாக LIC படத்தை இயக்கி வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் உச்சகட்ட கடுப்பில் உள்ளார்.

இப்படி இருக்க, இந்த வருடம் முக்கிய இயக்குனர்கள் roundtable ஒன்று நடந்தது. அதில் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டார். இது விமர்சனத்துக்குள்ளானது. இந்த வருடம் ஒரு படம் கூட இவர் இயக்கத்தில் வெளியாகவில்லை. இதில் இவர் முக்கிய இயக்குனரா என்று கேட்டு விமர்சிக்க ஆரம்பித்தனர். இதை தொடர்ந்து X வலைதளத்தில் இருந்தே வெளியேறும் அளவுக்கு ட்ரோல்களை சந்தித்தார்.

முழு நேர தொழிலதிபரான விக்னேஷ் சிவன்

இவர் இப்படி ட்ரோல் மெட்டீரியல் ஆனதற்கு காரணம் நயன்தாரா தனுஷ் பிரச்சனை தான். தன் திருவாயை இவர் மூடிக்கொண்டு இருந்திருக்கலாம்.. ஆனால் இவர் ஹீரோயிசம் காட்டுகிறேன் என்று ஒரு ஸ்டோரி போட, அதுவே இவருக்கு யமனாக மாறியது. இந்த நிலையில், இவர் புதியதாக ஒரு பிசினெஸ் ஆரம்பித்திருக்கிறார்.

பாலிவுட் மற்றும் tollywood-ல் பேமஸ் ஆக இருக்கும் செலிபிரிட்டி மேனேஜ்மென்ட் பிசினெஸ்ஸை தான் இவர் கையில் எடுத்திருக்கிறார். பொதுவாக செலிபிரிட்டிகளின் கால் ஷீட்களை கவனித்துக்கொள்ளும் வேலை. ஏற்கனவே இந்த பிசினெஸ்ஸை வெற்றிகரமாக செய்து வருகிறார் ராணா.

அவரை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இதை ஆரம்பித்து இருக்கிறார். இவர் முழு நேர தொழிலதிபராக தான் இருக்கிறார். காரணம் நயன்தாரா முதலீடு செய்திருக்கும், அணைத்து நிறுவனங்களையும் விக்னேஷ் சிவன்தான் கவனித்து வருகிறார்.

இப்படி இருக்க எங்கிருந்து படம் இயக்குவது. மொத்தத்தில் படம் எதுவும் இயக்கின மாதிரி தெரியல என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News