வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஸ்ரீகாந்த் அண்ணே.. உங்களுக்கு என்னாச்சு.. ஸ்ரீகாந்த் பாடும் டூயட் பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் 90ஸ் கிட்ஸ்

சமீபத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் ஒரு பாடல் இன்ஸ்டாகிராம்-ல் பயங்கர வைரலானது. அந்த பாடல் வெளியான நாளில் இருந்து, இது என்னடா ஸ்ரீகாந்த்-க்கு வந்த நிலைமை என்று தான் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ஆப்பிள் பூவே நீயாரோ என்று ரொமான்ஸ் செய்த நபர், பாவம் இன்று இந்த நிலைமைக்கு வந்துட்டாரே என்றும் அவர் ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

நடிகர் ஸ்ரீகாந்த் தினசரி எனும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தை cyntia எனும் ஒரு பெண் தயாரிக்கிறார். அவருக்கு ஹீரோயினாக வேண்டும் என்று ஆசை போல. அவர் தானே அந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என்று கூறியுள்ளார். படமே வேண்டாம் என்று ஸ்ரீகாந்த் கிளம்புவார் என்று பார்த்தால், அதற்க்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படத்தில் இளையராஜா தான் இசையமைப்பாளர். அவர் வழக்கமான இசையே இந்த படத்தில் இல்லை. தேடி தேடி நான் கண்டேன் உன்னை என்று ஒரு பாடல் வெளியாகி தற்போது ட்ரோல் மெட்டீரியாலாக மாறியுள்ளது.

தலைகீழாக சரிந்த மார்க்கெட்

ஒரு காலத்தில் ஸ்ரீகாந்த் பீக்கில் இருந்தார். தமிழ் திரையுலகில் அழகான நடிகற்காளாக இருந்தவர்களில் ஒன்று பிரசாந்த், மற்றொன்று ஸ்ரீகாந்த். பிரசாந்தின் மார்க்கெட் ஒரு கட்டத்தில் சரிந்தது. அந்த நேரத்தில், ஸ்ரீகாந்த் சரியான படங்களை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டார். அதன் விளைவாக அவருக்கு பெயர் சொல்லும்படி எந்த படமும் அமையவில்லை.

காதல் திருமணம் என்று செட்டில் ஆகிவிட்டார். இவர் நடித்தால் ஹீரோ ரோல் மட்டும் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். அதுதான் பிரச்சனை. விஜய், அஜித், ஸ்ரீகாந்த் அனைவரும் ஒரு காலகட்டத்தில் முன்னேறி வந்தவர்களாக இருந்தாலும், கதை தேர்வில் விஜய் அஜித் சரியாக நடந்துகொண்டு, நல்ல படங்களை சூஸ் செய்து டாப் 2 இடங்களை பிடித்தார்கள்.

ஸ்ரீகாந்த், அதை தவறவிட்ட நேரத்தில், charecter ரோல் செய்திருந்தால் கூட இன்று இப்படி மீம் டேம்ப்லேட் ஆக மாறி இருக்க மாட்டார்.

Trending News