வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வருவார்களா.. இல்ல நன்றியை மறப்பார்களா? சூர்யா, விக்ரமை உற்றுநோக்கும் சினிமா துறை

சேது படம் மூலம் தனது என்ட்ரியை கொடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் சினிமா துறைக்கு வந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை கோலாகலமாக கொண்டாடும் பொருட்டில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வரும் டிசம்பர் 18-ஆம் தேதி பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளார்.

இயக்குனர் பாலா முரட்டு குணம் கொண்டவராக இருந்தாலும், அவரால் இன்று திரை துறையின் உச்சத்துக்கு சென்றவர்கள் ஏராளமானோர். பல நடிகர்களுக்கு திருப்பு முனையை கொடுத்த இயக்குனர். முக்கியமாக சூர்யா மற்றும் விக்ரம்-க்கு turning point-டை கொடுத்தவர்.

வருவார்களா.. இல்ல நன்றியை மறப்பார்களா?

1999-ஆம் ஆண்டு, சேது படத்தை நடிகர் விக்ரமை வைத்து எடுத்தார். இன்றளவும் பேசப்படும் விக்ரம் கேரியரில் முக்கிய படமாக சேது படமுள்ளது. அந்த படம் கொடுத்த வெற்றி, விக்ரமுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

இவரை தொடர்ந்து சூர்யாவை நந்தா படத்தை எடுத்து ஹிட் கொடுத்தார். இவர்கள் இரண்டு போரையும் இணைத்து blockbuster ஹிட் ஆக, பிதாமகன் படத்தை இயக்கினார்.

பாலாவிடம் வேலை செய்வது கஷ்டம் என்று பலர் கூறினாலும், பலருக்கு தரமான படைப்புகள் மூலம் வாழ்க்கையை கொடுத்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு பாராட்டு விழா நடக்கவிருக்கிறது.

அதில், இவரால் வளர்ந்து நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் பங்கேற்பார்களா? என்ற கேள்வி தான் அனைவரிடமும் உள்ளது. இவர்கள் வருவார்களா இல்லை நன்றியை மறப்பார்களா என்று சினிமா துறை உற்று கவனித்து கொண்டு இருக்கிறது.

Trending News