புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கதிரிடம் பொண்டாட்டியாக அதிகாரம் பண்ணும் ராஜி.. பொண்டாட்டி பக்கம் சாயாமல் இருக்கும் பாண்டியனின் வாரிசு

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிருக்கு அடிபட்டு இருக்கிறது என்று தெரிந்ததும் குழலி வீட்டிற்கு வந்து ஆறுதலாக பேசுகிறார். வரும்பொழுது வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டன் குழம்பு செய்து கொண்டு வந்து கொடுக்கிறார். அதே நேரத்தில் தங்கமயில் அம்மா அப்பாவும், கோழி குழம்பு கொண்டு வந்திருக்கிறார்கள்.

பிறகு அனைவரும் சேர்ந்து சாப்பிடும் பொழுது குழலி அவர் சமைத்து சாப்பாட்டை அனைவருக்கும் பரிமாறுகிறார். இதை பார்த்த தங்கமயில் அம்மா, அவருடைய சாப்பாட்டை எடுத்து பரிமாற சொல்கிறார். ஆனால் குழலி அதெல்லாம் அப்புறம் சாப்பிடு வாங்க ஒரு ஓரமா இருக்கட்டும் என்று சொன்னதும் தங்கமயில் அம்மா முகம் வாடிப் போய்விட்டது.

இதை பார்த்த செந்தில், எனக்கு அந்த குழம்பு கொடுங்க என்று சொல்லி வாங்கி சாப்பிடுகிறார். அத்துடன் கதிரும் சாப்பிட்ட நிலையில் சூப்பராக இருக்கிறது என்று இரண்டு பேரும் பாராட்டிய நிலையில் தங்கமயிலும் அவருடைய அம்மாவிற்கு ரொம்ப சந்தோஷம் ஆகிவிட்டது. அப்படியே சரவணனுக்கும் கொடுக்கிறார், ஆனால் சரவணன் எனக்கு வேண்டாம் என்று சொல்லி அக்கா கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு விடுகிறார்.

பிறகு மீனாவை ஆபீஸில் டிராப் பண்ணுவதற்கு செந்தில் பைக்கில் கூட்டிட்டு போகிறார். போகும் பொழுது மீனா, தங்கமயில் அம்மா மனசு கஷ்டப்படக்கூடாது என்று நீங்கள் செய்த விஷயம் உண்மையிலே சந்தோஷமாக இருந்தது என்று சொல்கிறார். உடனே செந்தில், எனக்கும் இப்படி என்னுடைய மாமியார் சமைத்து வந்து அக்கறையாக பரிமாற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

அதுவும் கூடிய விரைவில் நடைபெறும், அவங்க ஆசைப்பட்ட மாதிரி நான் அரசாங்க உத்தியோகத்தை பெற்று விடுவேன். பிறகு உங்க அம்மா அப்பா என்னை மருமகன் என்று ஏற்றுக்கொள்வார் என சொல்லி மீனாவை சந்தோஷப்படுத்தி விட்டு போகிறார். பிறகு மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மீனாவின் அம்மா ஆபீஸ்க்கு வந்து விடுகிறார்.

வந்ததும் உங்க குடும்பத்தில் என்ன பிரச்சனை கதிர் மீது ஏதோ தவறு இருப்பது போல் ஊரில் எல்லாரும் பேசுகிறார்கள். இதனால் உங்க அப்பா மான மரியாதை போய்விட்டது என்று பெரிய பிரச்சினை பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று கேட்கிறார். அதற்கு மீனா பதில் அளிக்கும் விதமாக வீட்டில் நடந்த விஷயத்தையும் கதிர் செய்த நல்லதையும் சொல்லி மீனாவின் அம்மாவிற்கு புரிய வைத்து விடுகிறார்.

பிறகு நான் நம்ம வீட்டில் எப்படி இருந்தேனோ, அதே மாதிரி தான் என்னுடைய புகுந்த வீட்டிலும் ராணி மாறி இருக்கிறேன். அதனால் என்ன நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி மாமியார் சமைத்து கொடுத்த சாப்பாட்டை அம்மாவுக்கு கொடுத்து சாப்பிட சொல்கிறார். பிறகு அதை வீடியோ காலில் கோமதிக்கு காட்டி கோமதியும் சந்தோஷப்படுத்தி விட்டார்.

இதற்கிடையில் கதிர் காலேஜ் போவதற்கு கிளம்புகிறார். இதை பார்த்த ராஜி, உடம்பு இன்னும் சரியாகலை அதற்குள் என்ன காலேஜுக்கு கிளம்புற, காலேஜ்க்கு எல்லாம் போகக்கூடாது என்று அதிகாரமாக சொல்ல ஆரம்பித்து விட்டார். ஆனாலும் கதிர் கேட்ட மாதிரி இல்லை என்று கோமதியிடம் சொல்லி கதிரை காலேஜுக்கு போக விடாமல் தடுத்து விட்டார். அந்த வகையில் கதிர் மீது பாசமும் காதலும் வந்துவிட்டது, அதனுடன் சேர்ந்து பொண்டாடி என்கிற அதிகாரப்பண்ணும் தோரணையும் ராஜியிடம் வந்துவிட்டது.

இதனை தொடர்ந்து செந்தில் மற்றும் கதிர் கட்டிட்டு வந்த பொண்டாட்டிகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுடைய மனசு கஷ்டப்படும் படி நடக்காமல் நடந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த சரவணன் மட்டும் மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தை புரிந்து கொள்ளாமல் இன்னும் அப்பா பிள்ளையாகவே இருக்கிறார்.

- Advertisement -

Trending News