Sun Tv Serial: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றுவிட்டது. அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று முதல் ஆறு இடத்திற்கு மற்ற சேனல்கள் உள்ளே வராத அளவிற்கு சிம்மாசனத்தில் சன் டிவி சீரியல்கள் ஜொலித்து வருகிறது. ஆனால் அதற்காக அதிக மெனக்கெடு எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் எந்த சீரியல்கள் எல்லாம் மக்களிடத்தில் வரவேற்பை பெறாமல் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்திக்கிறதோ, அதை எல்லாம் ஓரங்கட்டி அதற்கு பதிலாக புத்தம் புது சீரியல்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மட்டுமே புத்தம் புது சீரியலாக லட்சுமி, மருமகள், மூன்று முடிச்சு, ரஞ்சினி, போன்ற பல சீரியல்கள் வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்த வரிசையில் ஒட்டுமொத்த மக்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் இரண்டாம் பாகமும் வரப்போகிறது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியில் இன்னொரு ஹிட் சீரியலின் இரண்டாம் பாகத்தையும் கொண்டுவர முடிவு பண்ணி இருக்கிறார்கள். அந்த சீரியலும் மக்களின் ஃபேவரிட் நாடகமாக அதிக வரவேற்பை பெற்றது.
அது என்ன சீரியல் என்றால் பிரியங்கா நல்காரி மற்றும் சிப்பு சூரியன் நடிப்பில் வெளிவந்த ரோஜா தான். இந்த சீரியலும் இரண்டாம் பாகம் வரப்போகிறது. இதில் பிரியங்கா நல்காரி ரோஜா கேரக்டரில் மறுபடியும் என்ட்ரி கொடுக்கப் போகிறார். ஆனால் இவருக்கு ஜோடியாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூரியன் நடிப்பாரா என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.
ஏனென்றால் இவர் ஜீ தமிழில் வரப்போகும் புத்தம் புது சீரியலில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எது எப்படியோ மக்களிடத்தில் அதிக இடத்தைப் பிடித்த எதிர்நீச்சல் 2 மற்றும் ரோஜா 2 மறுபடியும் சன் டிவி மூலம் வரப்போகிறது.