ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சைடு பிசினெஸ் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வெங்கட் பிரபு..

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது மோஸ்ட் Celebrated இயக்குனராக உள்ளார். Goat படம் அவர் Graph-ஐ தாறுமாறாக ஏற்றிவிட்டது. இவர் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். அதற்கான பட வேலைகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில், இவர் இயக்கத்தில் ஈடுபடாத காலத்தில் கூட, நல்ல லாபம் பார்த்து வருகிறார்.

சைடு பிசினெஸ் மூலமாக மட்டுமே கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார். பொதுவாகவே செலிபிரிட்டிகள் அவர்கள் திரையில் தோன்றாத காலத்திலும், படங்கள் இல்லாத காலத்திலும், வாய்ப்புகள் குறையும் காலத்திலும் தன்னை நல்ல நிலையில் வைத்துக்கொள்வதற்காக பல பிசினெஸ்களை செய்துவருவார்கள்.

அப்படி வெங்கட் பிரபு செய்யும் பிசினெஸை பார்த்து, பல இயக்குனர்கள், ‘அடடே இது நல்ல ஐடியாவா இருக்கே..’ என்று கூறி வருகின்றனர். மேலும் நல்ல பிழைக்க தெரிந்த பிள்ளையாகவும் இருக்கிறாரே என்றும் கூறி வருகின்றனர்..

வெங்கட் பிரபு செய்யும் சைடு பிசினெஸ்

தனது நிறுவனத்தை அவர் ECR-ல் தான் வைத்துள்ளார். கிடைக்கும் பணத்தை கண்டபடி செலவு செய்யாமல், அதை இரட்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடற்கரை ஓரமாக இரண்டு Dubbing studio வைத்துள்ளார் வெங்கட் பிரபு. AVM ஸ்டுடியோஸ்-க்கு அடுத்ததாக எதிரெதிர் திசையில் அவர் வைத்திருக்கும் இந்த ஸ்டூடியோ-வில் தான் சினிமாகாரர்கள் நிறைய பேர் டப்பிங் செய்வார்கள்.

பொதுவாக டப்பிங் ஸ்டூடியோ பல காத்துவங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இவர் சரியாக அவரது ஸ்டூடியோ-க்கு ப்ரோமோஷன் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி 1000 கோடி வசூல் செய்த புஷ்பா 2 படமே இந்த டப்பிங் ஸ்டூடியோ-வில் தான் டப் செய்திருக்கிறார்கள்.

Trending News