புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கெளதம் மேனன் பெயரை சொல்லாதீங்க.. எரிச்சலா இருக்கு.. கடுப்பான தனுஷ்

நடிகர் தனுஷ் கோலிவுடை பொறுத்தவரையில் பிசி ஆக்டராக வளம் வருகிறார். அவரது கால்ஷீட்-க்காக பல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர் தற்போது குபேரா படத்தை முடித்திருக்கும் நிலையில், இட்லி கடை, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்க்கு நடுவில் ஹாலிவுட்டில் வேறு ஒரு படம் கமிட் ஆகவுள்ளார்.

இந்த நிலையில், என்ன தான் தனுஷ் பலருக்கு உதவி செய்திருந்தாலும், பலர் முகத்தில் முழுக்கவே கூடாது என்கிற அளவுக்கு வெறுப்பை வெளிப்படுத்தியும் வருகிறார். அதில் முக்கியமான நபர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். தற்போது, இந்த லிஸ்டில் மற்ற ஒரு நபரும் இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

எரிச்சலா இருக்கு..

கெளதம் வாசுதேவ் மேனன், பல அழகான காதல் கதைகளை கொடுத்தாலும், ஒரு சில Flop-களையும் கொடுத்துள்ளார். அப்படி தனுஷுக்கு அவர் மார்க்கெட்டையே சரிய வைத்த ஒரு படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம் சுத்தமாக ஓடவில்லை. இதனால், அப்போதே தனுஷுக்கு GVM மீது ஒரு வெறுப்பு உருவானது.

சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்து ரசித்த தனுஷ், தனக்கும் ஒரு நல்ல படத்தை கொடுப்பார் என்று நினைத்தார். இப்படி பட்ட சூழ்நிலையில், முன்பு ஒரு யூட்யூப் சேனலில் GVM தனுஷை பேட்டி எடுத்தார். அப்போது ஒரு கதை சொன்னார், அந்த கதை பிடித்து தனுஷும் ஓகே என்று கூறிவிட்டார்.

ஆனால் படம் ரிலீஸான் பிறகு, utter flop ஆனது. இதில் கடுப்பான தனுஷ் கெளதம் வாசுதேவ் மேனனிடம் பிறகு பேசவே இல்லையாம். இந்த நிலையில், பல வருடங்கள் கழிந்த நிலையில், GVM தனுஷ் மேனேஜர்-ரை தொடர்பு கொண்டு, அவரது appointment கேட்டுள்ளார். தனுஷ் நடந்ததாய் எல்லாம் மறந்திருப்பார் என்று நினைத்த GVM புதிய படத்துக்காக இந்த appointment கேட்டிருக்கிறார்.

ஆனால் தனுஷ், GVM பெயரையே சொல்லாதீங்க.. எரிச்சலா இருக்கு என்று கூறியுள்ளார். இதற்கு மேல், இவரிடம் பேச முடியாது என்று புரிந்துகொண்ட மேனேஜர் appointment இல்லை என்று கூறிவிட்டாராம். இவங்களுக்குள்ள இப்படி ஒரு பகையை என்று தான் தோன்றுகிறது.

Trending News