ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் காந்தாரா. இன்றளவும் கொண்டாடப்படும் படமாக உள்ளது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு ஒவ்வொரு முறை பார்க்கும்போது மிரளவைக்கும் விதமாகவே உள்ளது. இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இன்னும் பிரமாண்டமாக, பட கதையின் வரலாறை படமாக்க முடிவு செய்தார் ரிஷப் ஷெட்டி.
அதனால், காந்தாரா சாப்டர் 1 படத்தை தற்போது இயக்கி நடித்து வருகிறார் ரிஷப் ஷெட்டி. இந்த படம் அடுத்த வருட இறுதியில் தான் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
மோகன்லால் இல்லை
ஆனால் தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் மோகன்லால் இந்த படத்தில் நடிக்கவில்லையாம். கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் மோகன்லால் கமிட் ஆக முடியாமல் போனது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு தரமான நடிகர் வேண்டும் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார் ரிஷப் ஷெட்டி.
இப்படி இருக்க, வேறொரு மலையாள நடிகர் தற்போது, காந்தாரா படத்தில் கமிட் ஆகவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த நடிகர், சமீபகாலமாக நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதோடு, நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட குருவாயூரில் வைத்து அவர் மகன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
ஆம். ஜெயராம் தான் காந்தாரா படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக நடிக்கவிருக்கிறார். கடந்த முறை வெறும் 9 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி 400 கோடி வசூலை கொடுத்த காந்தாரா படம், இந்த முறை 1000 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்துமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.