Vijay Sethupathi: இது விவாகரத்து வருடம் போலிருக்கிறது. இந்த வருடம் ஏகப்பட்ட பிரபலங்களின் பிரிவு செய்திகளை பார்த்து வருகிறோம்.
இதை பார்க்கும் போது கல்யாணம் ஆகாதவர்கள் கல்யாணமே வேண்டாம் என்ற முடிவுக்கு கூட வந்து விடுவார்கள். அந்த அளவுக்கு பல விவாகரத்து சம்பவங்கள் நடந்திருக்கிறது.
அந்த லிஸ்டில் தற்போது விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனரும் இணைந்துள்ளார். சில வருடங்களாக பிரிந்து இருந்த தனுஷ் ஐஸ்வர்யா சமீபத்தில் சட்டரீதியாக பிரிந்தனர்.
அதற்கு முன்பே ஜிவி பிரகாஷ் சைந்தவி தங்கள் பிரிவை அருவித்தனர். அந்த கையோடு ஜெயம் ரவி ஆர்த்தி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தனர்.
VJS ஆஸ்தான இயக்குனர் விவாகரத்து
இது அதிர்வை ஏற்படுத்திய நிலையில் ஏ ஆர் ரகுமான் கூட அந்த லிஸ்ட்டில் சேர்ந்தார். என்னடா நடக்குது இங்க என இந்த செய்திகள் பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தன் மனைவியை பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் தான் இவர்.
நல்ல இயக்குனர் என்ற அந்தஸ்து இவருக்கு இருக்கிறது. ஆனால் தற்போது அவர் தன் மனைவி தர்ஷனாவை பிரிவதாக கூறியுள்ளார்.
எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் அவரவருக்கு உண்டான திசையில் பயணிக்கிறோம்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்கவும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இவர் மீ டூ சர்ச்சையில் சிக்கியதுதான் இதற்கு காரணமா என இப்போது பேசப்பட்டு வருகிறது. எது எப்படியோ இந்த செய்தி திரை உலகில் கடும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.