ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பாக்யாவை துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பித்த முன்னாள் கணவர்.. கோபியை நினைத்து கண்ணீர் வடிக்கும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பட்டத்துக்கு பின் தான் புத்தி தெளியும் என்று சொல்வதற்கு ஏற்ப கோபிக்கு இப்பொழுது தான் பாக்யாவின் அருமை புரிந்திருக்கிறது. அதனால் ஈஸ்வரி கூப்பிட்டதும் பாக்யா வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கே கோபிக்கு ராஜ உபசரிப்பு என்பதற்கு ஏற்ப ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா என அனைவரும் விழுந்து விழுந்து கவனித்து வருகிறார்கள்.

இந்த வாழ்க்கை நன்றாக இருக்கிறதே என்று உணர்ந்த கோபி அப்படியே பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டு போலீஸ் கேசையும் வாபஸ் வாங்கி விட்டால் இங்கேயே தங்கிடலாம் என்று நினைத்து விட்டார். அந்த வகையில் பாக்கிய அவருடைய ஆர்டரில் புதுசாக ஒரு உணவை சமைக்க வேண்டும். ஆனால் அந்த உணவு எனக்கு சமைக்கத் தெரியாது, அதற்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு என ஜெனி மற்றும் செழியன் இடம் கேட்கிறார்.

உடனே கோபி, அதற்கு மட்டும் தற்காலிகமாக ஒரு செப்பை போட்டு சமைத்து விட்டால் பிரச்சினை சரியாகிவிடும் என்று ஐடியா கொடுக்கிறார். இதை கேட்ட ஜெனி மற்றும் செழியன் நல்ல ஐடியாவாக தான் இருக்கிறது, அப்படியே பண்ணலாம் என்று சொல்கிறார்கள். அதற்கு பாக்யா, அதை அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி போய் விடுகிறார்.

அடுத்ததாக கோபி வீட்டிற்கும் வரவில்லை போனும் பண்ணவில்லை என்று ராதிகா கவலைப்பட்டு உட்கார்ந்திருக்கிறார். உடனே ராதிகாவின் அம்மா, கோபி உன் வீட்டுக்காரர் தானே நீ போன் போட்டு பேசு என்று சொல்கிறார். ராதிகாவும் கோபிக்கு போன் போட்ட நிலையில் கோபி இங்கே நிம்மதியான தூக்கமும் நல்லா என்னை கவனித்துக் கொள்கிறார்கள்.

அத்துடன் இனியாவுக்கும் நிறைய படிப்பு சம்பந்தமான ஐடியாக்களை கொடுத்ததால் ரொம்பவே சந்தோசமாக இருக்கிறார். பாக்கியலட்சுமி பிசினஸுக்கும் ஐடியா கொடுத்திருக்கிறேன், எல்லோரும் என்னை இந்த வீட்டில் ரொம்ப மிஸ் பண்ணி இருக்காங்க என்று ராதிகாவிடம் கோபி புலம்பி தள்ளி விட்டார். இதனால் ராதிகா எதுவும் பேச முடியாமல் போனை வைத்து விடுகிறார்.

ஆனால் அப்பொழுது கூட நம்மளை பற்றியும் மயூ பற்றியும் ஒன்னும் கேட்கவில்லை என்று பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக கோபி இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அடுப்பாங்கரையில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று எழுந்து போய் பார்க்கிறார். அங்கே பாக்கியா வேலை பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த கோபி, பாக்கியா மீது அக்கறை காட்டும்படி நேரத்துக்கு தூங்கி உன் உடம்பை பார்த்து வேலை பாரு.

இரவு லேட்டா தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்திரித்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும், தயவு செய்து உன் உடம்பையும் பார்த்துக் கொள் என்று அக்கறை காட்டி பேசுகிறார். அத்துடன் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏதோ பழிவாங்கும் எண்ணத்துடன் பல தவறுகளை பண்ணியிருக்கிறேன் என்னை மன்னித்துவிடு என்று பாக்யாவிடம் சொல்கிறார்.

ஆனால் பாக்கியா அதற்கு பெருசாக எதுவும் சொல்லாமல் தூங்க போய் விடுகிறார். அடுத்ததாக பாக்கியா நடைப்பயிற்சிக்கு போயிருக்கிறார் என்று தெரிந்ததும் ஈஸ்வரியை கூட்டிட்டு கோபியும் போயிருக்கிறார். அங்கே பாக்யாவை பார்த்து தனியாக பேச வேண்டும் என்று குட்டி போட்ட பூனையாக சுற்றி வருகிறார். உடனே சந்தர்ப்பம் கிடைத்தவுடன் பாக்கியவுடன் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்த ராதிகா, இனி கோபி வாழ்க்கையிலும் மனசிலும் நாம் இல்லை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு எதுவும் பேச முடியாமல் போய்விட்டார். அதே நேரத்தில் கோபி, பாக்கியாவை துரத்தி துரத்தி பேச நினைப்பதை புரிந்து கொண்ட பாக்கியா, உங்களை காப்பாற்றியது மனிதாபிமானம் இருக்க போய். ஆனால் நீங்கள் தேவையில்லாமல் என் பின்னாடி இப்படி சுற்றி வந்தீர்கள் என்றால் ஏன் உங்களை காப்பாற்றினோம் என்று நினைக்கும் படி ஆகிவிடும்.

ஒழுங்காக உங்க வேலையை மட்டும் பார்த்துட்டு போங்க என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பாக்யாவை ஏமாற்றிவிட்டு ராதிகா பின்னாடி போனபொழுது பாக்கியா கண்ணீர் விட்டு அழுதார். தற்போது பாக்கியா தான் வேணும் என்று ராதிகாவை விட்டு பாக்கியா பின்னாடி சுற்றுவதால் ராதிகா, கோபியை நினைத்து கண்ணீர் வடிக்கிறார். ஆக மொத்தத்தில் இந்த கோபி இரண்டு பேருடைய வாழ்க்கையும் பாழாக்கி விட்டார்.

Trending News