ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்.. என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் என்றால் அது சிவகார்த்திகேயனும் சூரியும் தான். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், இருவரும் சண்டை போடும்போது, அங்குட்டு போய் விளையாடுங்க பா என்று ஒரு முதியவர் சொல்லி விட்டு போவார். இவர்கள் இருவருமே அந்த வார்த்தையை சீரியஸாக எடுத்துக்கொண்டு, தரமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறார்கள்.
காமெடியன் சூரிக்குள் ஹீரோ ஒருவர் இருக்கிறார் என்று கண்டெடுத்த வெற்றிமாறன், அவரை ஹீரோவாக வைத்து விடுதலை படத்தை எடுத்தார். அதில் சூரி, romantic portion-களை தவிர, மற்ற அனைத்திலும் மிரட்டி எடுத்திருப்பார். இப்படி இருக்க விடுதலை படத்தை தொடர்ந்து விடுதலை பாகம் இரண்டு மற்றும் கருடன் படத்தில் நடித்தார். கருடன் படம் 100 கோடியை தட்டி தூக்கியது.
இது சூரிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது சூரி நடித்துக்கொண்டு இருக்கும் அடுத்த படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
சூரி மீண்டும் விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிப்பில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதற்க்கு நடுவில் தற்போது, பிரசாத் பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்ற ஐஸ்வர்யா லட்சுமி தான் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி படத்திலும் நடித்து பயங்கரமான வரவேற்பை பெற்றார்.
இப்படி இருக்க சூரிக்கு ஜோடியாக இவர் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். இது எப்படி பட்ட கதைக்களமாக இருக்கும் என்று ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் அடுத்தாக வெளியாகும் விடுதலை 2 படத்தில் சூரியின் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்க பட்டிருக்கும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.