சமீபத்தில் நாகசைதன்யா சோபிதா துளிபலா திருமணம் கோலாகலமாக நடந்தது முடிந்தது. பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தும், பலர் வருத்தம் தெரிவித்தும் வந்தனர். இந்த நிலையில், தற்போது இருவரும் ஐஸ்லாந்து-க்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள்.
இப்படி இருக்க சமீபத்தில் நாகசைதன்யா திருமணத்தில் அவர் கட்டி இருந்த வாட்ச் இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வருகிறது. பார்ப்பதற்கு luxurious-ஆக தெரிந்த அந்த வாட்ச் தொடர்பான விவரங்களை தான் நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். சமீப காலமாக genz கிட்ஸ்-க்கு வாட்ச் மீது ஒரு தீராக்காதல் ஏற்பட்டுள்ளது.
எல்லோருக்கும் சமமான ஒரே விஷயம் நேரம் மட்டும்தான். ஆனால் அந்த நேரத்தை தெரிந்து கொள்ள பல கொடிகள் செலவழித்து வாட்ச் வாங்குவதை ஒரு பெருமையாக நினைத்து செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதுவும் ஒருவர் கட்டும் வாட்ச் அவர்கள் personality-யை சொல்லும் என்றெல்லாம் சொல்லி வாட்ச் கடைகள் பயங்கரமான மார்க்கெட்டிங் செய்துவருகிறார்கள்..
வாட்ச் விலை என்ன தெரியுமா
இப்படி இருக்க திருமணத்தில் நாகசைதன்யாவும் ஒரு ஆடம்பர வாட்சை தான் கட்டியுள்ளார். அந்த வாட்சின் விலையை கேட்டல் ஆடிப்போய் விடுவீர்கள். அந்த வாட்சின் விலை, 75 லட்சம். Patek phillippe என்ற ஒரு ப்ராண்டில் இருந்து தான் இவ்வளவு விலை கொடுத்து ஒரு வாட்ச் வாங்கி காட்டியுள்ளார்.
அந்த பிராண்ட் பொதுவாகவே luxury வாட்ச்களை தான் விற்பனை செய்கிறது. அவர்களிடம் 2000 ரூபாயில் ஆரம்பித்து கோடிக்கணக்கான ரூபாய் வரைக்குமான வாட்ச் உள்ளது. ஏன் இவ்வளவு costly என்று கேட்டீர்களானால், அதற்க்கு காரணம் அவர்கள் பயன்படுத்தும் மெட்டீரியல் தான்.
உண்மையான வைரம் பதித்த வாட்ச்கள் தான் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். மேலும் உண்மையா 18 காரட் கோல்ட்ல தான் பல வாட்ச்களை செய்கிறார்கள். இதுதான் இவ்வளவு அதிகப்படியான விலைக்கு காரணமாக உள்ளது.