புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

பதறாதீங்க நயன், இது என் கொடி பறக்குற காலம்.. சத்தமில்லாமல் இன்ஸ்ட்டா பதிவில் நயனை சீண்டிய த்ரிஷா!

Trisha: யானைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கும் ஒரு காலம் வரும்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு காலம் தனக்கு வந்ததால் தான், நயன்தாராவை சீண்டிப் பார்த்திருக்கிறார் த்ரிஷா.

த்ரிஷா சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலத்தில் தான் நயன்தாரா நடிகையாக வந்தார். அசின் திடீரென பாலிவுட் உலகத்திற்கு தாவி விட அந்த இடத்தை கெட்டியாக பிடித்தார் நயன்தாரா.

கிட்டத்தட்ட பல போராட்டங்களுக்குப் பிறகு நயன்தாரா முன்னணி நடிகையானார். தமிழ் சினிமாவில் எல்லா முன்னணி ஹீரோக்களும் நயன்தாராவை தான் தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் புக் பண்ணினார்கள்.

நயனை சீண்டிய த்ரிஷா!

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் மார்க்கெட்டே இல்லாமல் இருந்தால் த்ரிஷா. த்ரிஷா கலந்து கொண்ட பல விருது நிகழ்ச்சிகளில் நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதுகளை அள்ளி குவித்தார்.

பத்து வருடத்திற்கு பிறகு எல்லாமே தலைகீழாகி விட்டது. இப்போ த்ரிஷாவின் மார்க்கெட் உச்சியில் இருக்கிறது.

நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் யாருமே கடந்த சில வருடங்களாக வாய்ப்பு கொடுக்கவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் எந்த முன்னணி ஹீரோ படம் வேலை தொடங்கினாலும் அதில் ஹீரோயின் த்ரிஷா என்பது உறுதியாகி விடுகிறது.

கமல், விஜய், அஜித், சூர்யா என அத்தனை பேர் படங்களிலும் த்ரிஷா தான்.

இந்த நிலையில் தான் நயன்தாரா தன்னுடைய டாக்குமென்ட்ரி வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

நேற்று வெளியான நயன்தாராவின் பேட்டி ஒன்றில் தன்னை பற்றி அவதூறு பரப்பும் கலைப் பேச்சு சேனலை சேர்ந்தவர்கள் மூன்று குரங்குகள் என விமர்சித்தார்.

த்ரிஷா இதற்கு மக்களாக பதில் சொல்ல வேண்டும் என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.

என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குரங்கை தன்னுடைய தோல் மீது வைத்துக்கொண்டு புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார்.

Trisha
Trisha

என்ன விசேஷம் என்றால் த்ரிஷா சினிமாவுக்கு வந்து இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதைத்தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

எதை என்னவோ இனி பறக்க போறது என்னோட கொடி என்று மறைமுகமாக நயனை பகடி செய்வது போல் தான் இருக்கிறது.

Trending News