புளியன்கொம்பை பிடித்த கீர்த்தி சுரேஷ்.. கணவன் அன்டனி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

கீர்த்தி சுரேஷ் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. கோவாவில் நடந்த இவர்கள் திருமணத்தை பற்றி தான் அனைவரும் பேசி வருகின்றனர்.

இந்த திருமணத்துக்கு விஜய் வருவாரா மாட்டாரா என்பது தான் பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் முதல் ஆளாக அவர் தான் வந்திருந்தார்.

இப்படி இருக்க கீர்த்தி சுரேஷை திருமணம் செய்த அவரது காதலர் மற்றும் கணவரான அன்டனி தட்டில் யார் என்பதை தான் எல்லோரும் தேடி வருகிறார்கள்..

யார் இந்த அன்டனி தட்டில்?

கீர்த்தி சுரேஷை 15 வருடம் காதலித்து கரம் பிடித்த அன்டனி தட்டில் கொச்சியை பூர்விகமாக கொண்டவர். தனது டிகிரியை அமெரிக்காவில் முடித்தவர், பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இவருக்கு சொந்தமாக கொச்சியில் ஏகப்பட்ட ரிசார்ட்கள் உள்ளது. மேலும் சென்னையில் ஒரு சில கம்பெனி-களை வைத்துள்ளார். அது தவிர துபாய் தொழிலதிபராகவும் இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் ஒரு படத்துக்கு 3-4 கோடி சம்பளமாக பெரும் நிலையில், ஒரு மாதத்துக்கு 35 லட்சம் வரை ப்ரோமோஷன் மற்றும் விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து வருகிறார்.

மேலும் கீர்த்தி சுரேஷ் 40-50 கோடி சொத்து வைத்துள்ளார். இப்படி இருக்க அவர் செட்டிலாக முடிவு செய்து தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்க முடிவு செய்தார் கீர்த்தி சுரேஷ்.

சொத்து மதிப்பு..

கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்திருக்கும் அன்டனி தட்டிலின் சொத்து மொத்தம் 150 கோடி என்று கூறப்படுகிறது. இது தவிர அவருக்கு ஏகப்பட்ட பூர்விக சொத்தும் உள்ளது.

இப்படி செட்டிலான பிறகு தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளார்கள். தற்போது இவர்கள் இருவரது சொத்து மதிப்பை கூட்டி கழித்து பார்த்தால் 200 கோடிக்கு மேல் இருக்கும்..

வருமானம் தவிர, வீடு, நிலம், கார் என்று ஏகப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளது. இதில் கீர்த்தியிடம் மட்டுமே 5 கார்-கள் உள்ளது.

இந்த கோடீஸ்வர தம்பதிகள் மகிழ்ச்சியாக அவர் வாழ்க்கையை துவங்கியதை கண்டு பலர் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Comment