தளபதி விஜய் அரசியலில் இறங்கியதில் இருந்தே எங்கு பார்த்தாலும் அவரைப் பற்றி பேச்சுதான் அடிபடுகிறது. இணையத்தை திறந்தாலே விஜய் அவர்கள் பற்றி தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
பல நடிகர்கள், இயக்குனர்கள், ஏன் மக்களே குடும்பமாக விஜய் அவர்களுக்கு ஆதரவு தருவதை பார்க்க முடிகின்றது.
இன்னொருவர் அதுக்கும் மேல, ஆம் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடுவராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நம்முடைய தாடி பாலாஜி தான் ஒரு சம்பவம் செய்திருக்கிறார்.
அது என்னவென்றால், தளபதி விஜய் அவர்களின் புகைப்படத்தை தன் நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். அது மட்டும் இல்லாமல் பச்சை குத்தி முடிந்தவுடன் மிகவும் கண்கலங்கி உள்ளார்.
அதன் பிறகு பதில் அளித்தவர் தான் சாகும்வரை தளபதி என் நெஞ்சில் இருப்பார், என்னுடன் இருப்பார் என்று கூறி அனைவரையும் புல்லரிக்க வைத்து விட்டார்.
தளபதி தான் எப்போதும் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி வருவார். ஆனால் இப்போது தளபதியையே ஒருவர் தன் நெஞ்சில் குடியமர்த்தி உள்ளார் என்று இணையவாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.