ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இந்த வருடம் 1000 கோடி Club-ல் இணைந்த படங்கள் என்னென்ன தெரியுமா.?

தற்போதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்களையும் கதை நன்றாக இருந்தால் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இந்த வருடம் வெளியான சின்ன பட்ஜெட் படங்களான கொட்டுக்காலி, வாழை, லப்பர் பந்து, கருடன் என ஏகப்பட்ட படங்கள் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் சில படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுத்த பெரிதாக வசூல் செய்யாமலும் இருந்துள்ளது. அப்படி கங்குவா, வேட்டையன், இந்தியன் 2 என்று ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வசூலை செய்யவில்லை. இந்த நிலையில், இந்த வருடமாவது தமிழில் ஒரு 1000 கோடி வசூல் படம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க பட்டது. ஆனால் நடக்கவில்லை.

இப்படி இருக்க, இந்த வருடம் 1000 கோடி வசூல் செய்த படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்..

கல்கி 2898 AD: இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்க பட்ட ஒரு படமாக இந்த படம் உள்ளது. இந்த படத்துக்கு தமிழகத்தில் பெரிதாக வரவேற்பு இல்லையென்றாலும் வட மாநிலங்களில் பெரும் வரவேற்பு பெற்று, 1200 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்தை தொடர்ந்து பிரபாஸ் மீது பந்தயமாக இனி 2000 கோடி தான் கட்டுவார்கள்.

புஷ்பா 2: இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்க பட்ட படமாக புஷ்பா 2 படமும் உள்ளது. இந்த படம் புஷ்பா 1 க்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, எடுக்கப்பட்ட படமாக உள்ளது. இந்த படம், வெளியான நாளில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெறும் 5 நாட்களில் 1000 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தியது. தற்போது இதுவரை உலகளவில் 1190 கோடிகள் படம் கலெக்ட் செய்துள்ளது.

இந்த வருடம் இத்தனை படங்கள் வெளியாகியுள்ள 2 படங்கள் மட்டும் தான் 1000 கோடி வசூலை தொட்டுள்ளது. கங்குவா படம் நிச்சயம் 2000 கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் சொன்னார். அந்த படம் வசூல் செய்யவில்லை. மேலும் கோட் படம் confirm 1000 கோடி என்று பிரேம்ஜி சொன்னார். அதுவும் நடக்கவில்லை.

- Advertisement -

Trending News