புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆனதில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெறும் 10 நாட்களில் 1200 கோடியை தாண்டி வசூல் செய்தது மாபெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்க, படம் ரிலீஸ் ஆன அன்று, ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்க அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது மக்கள் கூட்டம் கூட, போலீசார் தடியடி நடத்த ஆரம்பித்தார்.
அப்போது மக்கள் எல்லோரும் தெறித்து ஓட, அந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் தவறுதலாக கீழே விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார்.
மேலும் அவரது குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறது. சூழ்நிலை இப்படி இருக்க, அல்லு அர்ஜுன் தான் இந்த விபத்துக்கு மரணத்துக்கும் காரணம் என்று கூறி அவரை கைது செய்தனர் போலீசார்.
ஆனால் உடனடியாக அவருக்கு ஜாமின் கிடைத்துவிட்டது. இருந்தபோதிலும், இந்த இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் கழித்தார் அல்லு அர்ஜுன்.
இதை தொடர்ந்து, இதற்க்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்தார்கள். அப்படி நடிகை ராஷ்மிகா இதெல்லாம் அநியாயம்.. துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்துக்கு அவர் எப்படி காரணமாக முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போ அந்த 5 பேர் மரணத்துக்கு யார் காரணம்?
இந்த நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அன்று நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.
அதற்க்கு அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பாக முடியும். அவர் வருகிறார் என்பது நிச்சயம் தியேட்டர் owner-க்கு தெரியும். அவர்கள், ‘இங்கு நிலைமை மோசமாக உள்ளது. கூட்டம் அதிகமாக உள்ளது’ என்று கூறியிருந்தால், நிச்சயம் அவர் வந்திருக்க மாட்டார்”
“அதை மீறி வந்திருந்தாள் கூட அவர் தப்பு என்று கூறியிருக்கலாம்.. அங்கு அத்தனை போலீஸ் இருந்தார்கள்.. கார் வரும்போதே, தடுத்து நிறுத்தி.. கூட்டமாக இருக்கிறது.. வெளியில் வராதீர்கள் என்று கூறியிருக்கலாம்..
மொத்தத்தில், அன்று நடந்த நிகழ்வு, யாரும் எதிர்பார்க்காத ஒரு விபத்து.. இதில் ஒருவரை மட்டும் குறை கூற முடியாது.. “
“ஒருவேளை, அல்லு அர்ஜுன், காரை ஒட்டி சென்று யாரையாது மோதி, அவர்கள் இறந்து போயிருந்தால் நிச்சயம் அவருக்கு தண்டனை வழங்க வேண்டும். இங்கு அப்படியான சம்பவங்கள் எத்தனையோ நடந்துள்ளது.
விமானப்படையின் சாகச நிகழ்ச்சியன்று, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்கள். அதற்க்கு யார் பொறுப்பு? எப்படி அது விபத்தோ.. இதுவும் அதே போல தான்..” என்று சரத்குமார் அல்லு அர்ஜுன்-க்கு ஆதரவாக பேசியுள்ளார்.