திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஆதவ் அர்ஜுனாவின் அடுத்தகட்ட நடவடிக்கை.. விஜய்யுடன் கூட்டணியா.?

Aadhav Arjuna : திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சியில் தேர்தல் வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜுனா இணைந்திருந்தார். இந்நிலையில் திமுகவுடன் விசிக கூட்டணியில் உள்ள நிலையில் ஆதவ் அர்ஜுனா சில நிபந்தனைகளை முன்வைத்து வந்தார்.

இதன் காரணமாகவே இரு கட்சிகள் இடையே ஒரு சுமூக நிலை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் பங்கு பெற்ற நிலையில் திருமாவளவன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு பதிலாக ஆதவ் கலந்து கொண்ட நிலையில் இப்போது மன்னர் ஆட்சி நடந்து வருவதாக திமுகவை விமர்சித்து நேரடியாக பேசி இருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விசிகவில் இருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டார் ஆதவ்.

விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா கூட்டணியா?

இதைத்தொடர்ந்து கட்சியிலிருந்து தானே விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் ஆதவ் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக இணைத்து கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும் வருகின்ற 2026 ஆம் சட்டமன்ற தேர்தல் களத்தில், தேர்தல் வியூகவாதியான பிரசாத் கிஷோரையும் நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் தான் பிரசாந்த் கிஷோர் ஜான் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார்.

ஆனால் ஏற்கனவே விஜய்யின் தரப்பிலிருந்து அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டமிட்டமாக கூறியிருந்தனர். ஆகையால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான். விஜய் தனித்து போட்டியிட தான் விரும்புகிறார் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

Trending News