விஜய் கடந்த பிப்ரவரியில் தவெக கட்சியை ஆரம்பித்து, முதல் மாநாடு நடத்தினார். அம்மாநாட்டில், தங்கள் கொள்கைத் தலைவர் என அம்பேத்கர், பெரியாரை அறிவித்தார்.
பெரியாரை தொடாமல் யாரும் தமிழ் நாட்டில் கட்சி ஆரம்பித்து ஜெயிக்க முடியாது என திராவிட கட்சிகள் தெரிவித்தனர். இதையடுத்து, திமுகவை கடுமையான விஜய் கடுமையாக குற்றச்சாட்டி பேசினார்.
இது அரசியல் களத்தில் பெரும் விவதத்தைக் கிளப்பிய நிலையில், விஜயின் அம்பேத்கர் தலைவராக ஏற்றுக்கொண்டதற்கும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என விஜய் கூறியதை முன்னாள் விசிக து.பொ., ஆதவ் அர்ஜூனா ஆதரவளித்தார்.
திமுக கூட்டணியில் விசிக இருக்கும் நிலையில் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு இருதரப்பிற்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியது. அடுத்து, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிலும் விஜய் – திருமாவளவன் பங்கேற்பதாக இருந்தது.
ஆனால் சர்ச்சைகளுக்கு இடம் அளிக்ககூடாது என அந்த விழாவில் பங்கேற்கவில்லை என திருமாவளவன் கூறினார். அதே விழாவில் கூட்டணி கட்சிகளின் அழுத்தம் என திமுகவை விஜய் விமர்சித்திருந்தார்.
அந்த விழாவில் மன்னர் ஆட்சி என திமுகவை நேரடியாக தாக்கிப் பேசினார் ஆதவ் அர்ஜூனா. இதையடுத்து, அவரை விசிக தலைமை இடை நீக்கம் செய்தது. அவரும் கட்சியை விட்டு விலகினார்.
அடுத்து பாமவில் அவர் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில் அவர், தான் அம்பேத்கர் புத்தக விழாவை நடத்தியதாக கூறப்படுகிறது.
விழாவில் பங்கேற்பதால் உடைந்துவிடும் அளவு பலவீனமான கூட்டணியா – பிஸ்மி
இதுகுறித்து வலைபேச்சு பிஸ்மி, “இந்த விழாவை ஆன்ந்த விகடன் நடத்தியதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் அந்த விழாவை நடத்தியது ஆதவ் அர்ஜூனா தான். அப்புத்தகத்தை உருவாக்கியதும் ஆதவ் அர்ஜூனா தான்.
இந்த புத்தகத்தின் விலை 1000 ரூபாய். இந்த தொகைக்கு 2000 காப்பி அடிப்பதாக வைத்துக் கொண்டால், அதன் மதிப்பு 20 லட்சம். 500 என்பது அதன் காஸ்டாக இருக்கும்.
இப்புத்தகத்தின் மொத்த தொகையாக இருப்பது 10 லட்சம் தான். ஆனால் இப்புத்தக விழாவுக்காக 50 லட்சம் செலவாகியுள்ளது. எனவே 10 லட்சம் லாபம் கிடைக்க கூடிய புத்தகத்துக்கு 50 லட்சம் செலவு செய்ய, எந்த பதிப்பாளரும் முன்வர மாட்டர்.
ஆனந்த விகடன் இப்படி செய்ய மாட்டார்கள். இதற்கு முழு செலவை ஆதவ் அர்ஜூனா தான் செய்தார். அதன் பின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற அமைப்பு உள்ளே வந்தது” எனத் தெரிவித்துள்ளார்.