Adhik Ravichandran : ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அஜித்தின் குட் பேக் அக்லி படத்தை இயக்கி வருகிறார். மிகக் குறுகிய நேரத்தில் தனது திறமையால் அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரன் பெற்றிருக்கிறார்.
மேலும் குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் தனது உடம்பை சரமாரியாக குறைத்து இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியம் மட்டும் அளவுக்கு வைத்துள்ளது.
மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்த நிலையில் அப்போது விடாமுயற்சி படம் வெளியாக உள்ளதால் குட் பேட் அக்லி படத்தை கால தாமதமாக வெளியிடுகின்றனர்.
குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படம்
ஆனாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் முடிவடைய உள்ள நிலையில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் எந்த படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது எஸ்ஜே சூர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இவர் தான் இயக்கியிருந்தார்.
இப்போது இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை தான் ஆதிக் ரவிச்சந்திரன் எடுக்க உள்ளார். விஷால் ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பிறகு மிஸ்கின் மற்றும் விஷால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி, நடிக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் இந்த படம் உருவாகுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி 2 படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.
மேலும் இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். விஷாலுக்கு மார்க் ஆண்டனி கம்பேக் கொடுத்த நிலையில் இந்த படமும் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.